Do not mix up truth with falsehood and knowingly hide the truth. Holy Qu’ran(2:42)

Sunday, July 28, 2013

31) ரமலான் மாதம்


 

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)............... (அல் குர்ஆன் 2:185)
 
ரமலான் நோன்பின் சிறப்புக்கள் :
ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்
*************************************
நபி(ஸல்) அவர்கள்,
'ரமலான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன"
(அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி),நூல்:முஸ்லிம் 1957) என்றும்,
'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761) என்றும் அறிவித்தார்கள்
*************************************
 

 ரமலானின் முதல் பத்து

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,

நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது.
ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.
 
கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.
 
இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
 
இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,
 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை' என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.
 
இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம். ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.
 
ரமலானின் இரண்டாவது பத்து 
இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.
 
இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.
 
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)
 
இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும்,சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.
 
"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது.
 
இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:
 
"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.
 
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)
 
 
 

 ரமலானின் மூன்றாவது பத்து :
மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையும் தண்டனையும்.
 

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையும் தண்டனையும்.

அல்லாஹ் அல் குர்ஆனில்,
நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.
 
திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-33).
 
நபிமொழி : "இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா
 
நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
 
நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும்.

முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)

மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.

உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பும் தேடவேண்டும்.

எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)

அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.
 
ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.
ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
 லைலத்துல் கத்ரின் மகத்துவம் :

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)
 
 
லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.
 

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.

நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும்.
 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.
 
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.

இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
 
 
இஃதிகாஃப் :

நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)
இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.  
 
ஸகாத்துல் பித்ர் :
ரமளான் மாதம் முடிந்து ஷவ்வால் பிறை பிறந்ததும் பெருநாள் தொழுகைக்கு முன் ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டிய தர்மமே ஸகாத்துல் பித்ர் (ஏழைகளின் பசி போக்கும் தர்மம்) எனப்படும்.

ரமளான் நோன்பிலே நிகழுந்துள்ள தவறுகள் குறைகளுக்கு பரிகாரமாகவும், நம்மையறியாமல் வெளிவந்த வார்த்தைகளாலோ, நிகழ்ந்துவிட்ட செயல்களாலோ பிறரைக் காயப்படுத்தியிருந்தால் அதைப் போக்கும் அருமருந்தாகவும், ரமளானைப் பெற்று புனித நோன்பை நோற்று வணக்கவழிபாடுகள் புரியும் பெரும் பேறை நல்கிய நாயனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அளிக்கப்படட மகத்தான வாய்ப்பே இந்த ஈதுல் பித்ர் என்னும் தர்மமாகும்.
 
யார் மீது கடமை ?பெருநாள் செலவுக்கு வசதி பெற்ற சுதந்திரமான ஆண்,பெண்ணுக்கும்.சிறுவர் சிறுமியருக்கும், அடிமைக்கும் கடமையாகும். இவர்களின் செலவுக்குப் பொறுப்பேற்கும் குடும்பத்தலைவர் இவர்களுக்காக ஸகாத்துல் பித்ர் கொடுக்கவேண்டும். பொறுப்பிலுள்ளோர் தாமாகக் கொடுக்கும் வசதியைப் பெற்றால் அவர்களும் வழங்கலாம்.
 
யாருக்கு வழங்கவேண்டும்?
ஸகாத் பெறக் கடமையான ஏழைகளுக்கும், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கவேண்டும்.
 
எதை வழங்க வேண்டும்?
நாம் ஊரில் வழமையாக உட்கொள்ளும் உணவுப் பொருளான அரிசி, கோதுமை, பேரீத்தம் பழம், போன்றவையாகும்
 
எவ்வளவு வழங்கவேண்டும் ?
ஒரு ஸாஃ – என்பது நாலு முத்துகளாகும். ஒரு முத்து என்பது நடுத்தரமான ஒருவருடைய இரு கைகள் நிறைய உள்ள தானியத்தை அளந்தால் வரும் எடையைக்குறிக்கும். அவ்வாறு நான்கு முத்துகள் ( ஒரு ஸாஃ) 2 கிலோ 400 கிராம் எடையுள்ள தானியம் என.மார்க்க அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர்.
 
எங்கே வழங்கவேண்டும்?
நாம் வாழும் ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கவேண்டும். அவர்களை விட நமது தாய் நாட்டில் ஏழைகளாக நமது உறவினர்கள், அண்டை அயலார்கள், ஊர் மக்கள் இருந்தால் அவர்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும்.
 
வெளிநாட்டிலிருப்போர் தமது சொந்த ஊரிலே வழங்குவதாயின் அவரது பெருநாள் தொழுகைக்கு முன்னர் வினியோகிக்கப்படவேண்டும். அவரது சொந்த ஊரில் ஒரு நாளோ இரு நாட்களோ பிந்தி பெருநாள் கொண்டாடலாம். அவ்வாறு பிந்திக் கொடுப்பதால் அவரது ஸகாத்துல் பித்ர் அங்கீகரிக்கப்படமாட்டாது.
 
எந்த நேரத்தில் வழங்கவேண்டும்?
ஷவ்வால் பிறை பிறந்தது முதல் பெருநாள் தொழுகைக்கு செல்வது வரை வழங்கவேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன்னர் வழங்கப்படும் தர்மம் கடமையான (பர்ளான) தர்மமாக் கருதப்படும்.அதன் பிறகு வழங்கப்படும் தர்மம் சாதாரண தர்மமாகவே கருதப்படும்.
 
நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.
 
 
அன்புடன் 
சாதிக் கட்டமீரான்


Tuesday, July 23, 2013

30). எதைச் சாதித்து 2012 இயற்பியலுக்கான நோபல் பரிசை இருவர் தட்டிச் சென்றனர்?

புவியில் மனித இன வாழ்வின் மேம்பாட்டுக்காக தங்களது அறிவுத் திறமையால் அரிய கண்டுபிடிப்பைத் தந்தமைக்காக இந்தப் பரிசு!! [நோபல் பரிசு மெடலின் மேல் எழுதப் பட்டிருப்பதன் குத்து மதிப்பான தமிழாக்கம்!!  இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற இரு விஞ்ஞானிகளுக்கும் இந்த மெடலுடன் இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் பரிசு இருவருக்கு தலா மூன்று கோடி ரூபாயாக பகிர்ந்தளிக்கப் படும். ]

உங்களுக்கு ஒரு வினோதமான நண்பர் இருக்கிறார்.  அவருக்கு நீங்கள் போன் செய்து "நீங்க இப்போ வீட்டில் இருக்கீங்களா, இல்ல வீட்டுக்கு வெளியே தோட்டத்துல இருக்கீங்களா?" -ன்னு கேட்கிறீர்கள்.  அதற்க்கு அவர், "ரெண்டுலயும்தான்!!" என்கிறார்.  அதெப்படி ஒருத்தர் ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் இருக்க முடியும்?  ஆனால் உங்கள் நண்பர் ஒரு போதும் பொய் சொல்வதில்லை, அதேசமயம் அவர் சொல்வது நடைமுறைக்கு சாத்தியமும் இல்லை, எனவே உங்களுக்கு குழப்பம் வருகிறது. ஆகையால், உண்மையில் என்னதான் நடக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலில், நேரிலேயே போய்ப் பார்த்துவிடலாம் என்று அவர் வீட்டிற்க்குச் செல்கிறீர்கள்.  வீட்டிற்கு வெளியே ஒளிந்திருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில்  அவ்வப்போது அவரைக் கவனிக்கிறீர்கள்.  நீங்கள் பார்க்கும் போதெல்லாம் ஒன்று அவர் தோட்டத்திலோ, அல்லது வீட்டிற்குள்ளோ தான் இருக்கிறார்.  இரண்டு இடத்திலும் ஓரே சமயத்தில் அவர் இருப்பதாக உங்களால் ஒருபோதும் பார்க்க முடியவில்லை. அடுத்து அவரைச் சந்திக்கலாம் என்று நேராக வீட்டிற்க்கே செல்கிறீர்கள்.  ஒரு அதிசயம், வீட்டிற்கு இரண்டு வாசற்ப்படிகள் உள்ளன.  அந்தச் சமயம் அவர் வீட்டினுள்தான் இருக்கிறார்.  அவரிடம் கேட்கிறீர்கள், "நீங்கள் உள்ளே நுழைய எந்த வாசற்ப்படியைப் பயன்படுத்துகிறீர்கள்?"   அதற்க்கு அவர், "நான் இரண்டிலும் ஒரே சமயத்தில் உள்ளே நுழைகிறேன்!!" என்கிறார்.  அதெப்படி ஒரே சமயத்தில் இரண்டு கதவில் ஒரு ஆள் நுழைய முடியும்?  ஒரே வேலை இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி இந்தக் கதவிலும் இன்னொரு பகுதி அந்தக் கதவிலும் நுழைகிறாரோ?  உங்களால் அதை நம்ப முடியவில்லை.  அவர் எந்த கதவு வழியாக நுழைகிறார் என்பதைக் கண்கானிக்க  இரகசியமாக  ஒரு கேமாராவை அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிடுகிறீர்கள்.   பின்னர் அதை ஓட்டிப் பார்த்தால் அவர் ஏதாவது ஒரு கதவு வழியாகத்தான் உள்ளே நுழைகிறார், ஒரே சமயத்தில் இரண்டிலும் ஒருபோதும் நுழையவில்லை!!

அவர் தனக்கு இருப்பதாக சொல்லும் இந்த அதிசய குணங்களை உங்களால் எதை வைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.  நேராக அவரிடமே போய்,"நீங்கள் சொல்வது எதுவும் நம்பமுடியவில்லை தயவு செய்து என் குழப்பத்தைப் போக்குங்கள்" என்று கேட்டுவிடுகிறீர்கள்.  அதற்க்கு அவர், " நீங்கள் என்னை பார்க்காதவரைக்கும் நான் ஒரே சமயத்தில் இரண்டு இடத்திலும் இருப்பேன். ஆனால், என்னை நீங்கள் பார்த்துவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் தான் தோன்றுவேன், உங்களால் இரண்டு இடத்திலும் நான் இருப்பதைப் பார்க்க விடமாட்டேன்.  நான் இரண்டு கதவிலும் நுழைவது நிஜம்தான், ஆனால் என்னை டபாய்க்கலாம் என்று நீங்கள் ஆள் வைத்தோ, கேமாரா வைத்தோ அல்லது வேறெந்த முறையிலுமோ கவனித்தால், நான் அந்த மேஜிக்கை காண்பிக்க மாட்டேன், ஏதாவது ஒரு கதவில் தான் நுழைந்து செல்வேன்!!

மேலே சொன்னது மாதிரி நமக்கு நண்பர்கள் இல்லாமல் போகலாம், ஆனால் குவாண்டம் உலகில் உள்ள நண்பர்கள் எல்லோருமே இப்படித்தான் [நமக்கு] விநோதமாக நடந்து கொள்கிறார்கள்!!  மேலே சொன்னது இரண்டு உதாரணங்கள், அவங்ககிட்ட இன்னும் பற்பல வினோத செயல்பாடுகள் இருக்கின்றன.  அதுசரி அதென்னது குவாண்டம் உலகம்?  இந்த எலக்டிரான்கள், புரோட்டான்கள், அணுக்கள், ஃபோட்டான்கள் [ஒளித் துகள்] என்று நமது கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உலகம் உள்ளது அல்லவா, அதுவே குவாண்டம் உலகமாகும்.  அந்த உலகம் நாம் காணும் உலகில் இருந்து வேறுபட்டது, விநோதமானது. அதில் முக்கிய பங்கு வகிப்பது காண்பவராவார் [Observer].  ஒருத்தர் தன்னை காணாதவரை, தன்னுடைய வினோத பண்புகளோடு செயல்படும் குவாண்டம் அன்பர்கள், பார்க்கிறார் என்றவுடன் தங்களிடமுள்ள விசே ஷ, வினோத குணங்களை மறைத்து சாதாரணமாக இருப்பது மாதிரி செயல்பட ஆரம்பித்துவிடுகிறார்கள்.  நூறு வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி, நமது கணினி, தொலைகாட்சி, அணுசக்தி, மின்சாரம் என எல்லா இடங்களிலும் வெற்றிக் கொடி நாட்டிய குவாண்டம் இயக்கவியலின் மிகப் பெரிய குறை இது என்று கூட சொல்லலாம். "குவாண்டம் அன்பர்களின் இந்த விநோதப் பண்புகளை நாம் பார்க்கும் வண்ணம் செய்யவே முடியாதா? வெறும் கனவிலும் கற்பனையிலும் தான் இவற்றை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?" என்ற கேள்விக்கு, "ஆம், முடியும்" என்று சொல்லி 1990 களில் நிரூபித்த  இரண்டு பேர் 2012 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார்கள், ஒருத்தர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வைன்லேன்ட், இன்னொருத்தர் பிரான்சைச் சேர்ந்த செர்ஜ் ஹரோஷே!!


2012 ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வைன்லேன்ட் [இடது] [தேசிய தரக் கட்டுப்பாடு நிறுவன ஊழியர்] , இன்னொருத்தர் பிரான்சைச் சேர்ந்த செர்ஜ் ஹரோஷே [கல்லூரிப் பேராசிரியர்] , இருவருக்கும் வயது 68.

இருவருமே குவாண்டம் ஒளியியல் [Quantum Optics] துறையில் ஆராய்ச்சி செய்பவர்கள்.  இவர்கள் இருவரும் தனித்தனியே இரண்டு வேறு வழிமுறைகளில் இதை சாதித்துக் காட்டியுள்ளார்கள்.  டேவிட் வைன்லேன்ட் ஒரு தனி அயனியை [Ion: + அல்லது - மின்னூட்டமுள்ள அணு, இதில் எலக்ட்டிரான்கள் எண்ணிக்கை புரோட்டான்களின் எண்ணிக்கையை விட கூடவோ குறைச்சலாகவோ இருக்கும்] கட்டிப் போட்டு அதன் மீது ஒளித்துகளை [ஃபோட்டன் Photon] செலுத்தி ஆய்வை செய்தார்.  அவ்வாறு செய்யும் பொது, வேறு எதனுடனும் வினைபுரியாமல் தனியே இருக்கும் ஒரு குவாண்டம் துகள் தனது வினோதமான அத்தனை குவாண்டம் பண்புகளையும் இழக்காமல் ஆய்வுக்கு உட்படுகிறது.  ஒரு அணுவை ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் 'பார்க்க' முடியும் என்பது உள்ளிட்ட அத்தனை குவாண்டம் பண்புகளையும் நாம் காண முடியும் !!




செர்ஜ் ஹரோஷே, அதற்க்கு மாறாக, நன்கு பாலிஷ் செய்யப்பட்ட இரண்டு கண்ணாடிகளுக்கு நடுவே ஒளித்துகளாகிய ஃபோட்டானை மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கச் செய்து, அதனூடே அணுக்களை அனுப்பி ஃபோட்டான் மீதான ஆய்வை மேற்கொண்டார். பொதுவாக ஒளியை பார்த்தால் அது பார்க்கப் படும் கருவியாலோ, அல்லது கண்களாலோ கபளீகாரம் செய்யப் படுகிறது.  அவ்வாறு ஒளியை அழிக்காமல் [without destroying] அதன் பண்புகளை ஆய்வு செய்வது இதற்கு முன்னர்  சாத்தியப் படவில்லை. ஒளியை பத்திரமாக இருக்க வைத்து, அதன் பண்புகளை ஆராயும் யுக்தியைத்தான் செர்ஜ் ஹரோஷே வெற்றிகரமாகச் செய்து காண்பித்தார்.


 

ஃ போட்டான்களை கட்டிப் போட்டு ஆய்வு: நன்கு பாலிஷ் செய்யப் பட்ட கண்ணாடிகளுக்கிடையே ஒளியை  பிரதிபலிக்கச் செய்து, அணுக்களை அனுப்பி ஆய்வு செய்தல்.

முன்னவர் அணுவை கட்டிப் போட்டு அதை ஒளியின் மூலம் ஆய்வு செய்தால், பின்னவர் ஒளியை கட்டிப் போட்டு அணுவை அனுப்பி ஆய்வு செய்தார்.  ஆகையால் இருவருமே, குவாண்டம் துகள்களுடன் ஒளி எப்படி வினை புரிகிறது என்பதைத்தான் ஆய்வு செய்தார்கள்!!  இதில் தனிப்பட்ட ஒரு அணுவையும், தனிப்பட்ட ஒரு ஃ போட்டானையும் கட்டிப் போட இவர்கள் கையாண்ட யுக்தி தான் இவர்களின்  தனிச் சிறப்பாகும்!!  பயணித்த பாதை வேறு ஆனால் அடிப்படை தத்துவம் ஒன்றே!!  [தீப்பெட்டியை பிடித்துக் கொண்டு, அதை தீக்குச்சியால் உரசி பற்ற வைப்பது சாதாரணமானவர்கள் செய்வது, அதையே தீக்குச்சியை அசையாமல் பிடித்துக் கொண்டு அதை தீப்பெட்டியால் ஓங்கி அடித்து பற்ற வைப்பது சூப்பர் ஸ்டார் செயல்!! ஆனபோதிலும் இரண்டிலும் அடிப்படை ஒன்றுதானே!!]


செர்ஜ் ஹரோஷேவின் கண்டுபிடிப்பின் பலன் என்ன?  தப்போது நமது கணினியில் 0 அல்லது 1 என்ற நிலையை வைத்தே அது செயல்படுகிறது.  இதை பைனரி டிஜிட் அல்லது பிட் என்பார்கள். ஆனால், குவாண்டம் கம்பியூட்டரில் உள்ள டிஜிட், கியூபிட் [qubit ] என்படுகிறது, இது மேற்கண்ட தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுவதாகும்.  இது செயல் முறைக்கு வந்தால் அதில் ஒரே சமயத்தில் 0,1 இரண்டையும் சேமித்து வைக்க முடியும். இதன் விளைவு, 300 கியூபிட்கள் இருந்தாலே போதும் அவற்றைக் கொண்டு  2300 மதிப்புகளை சேமித்து வைக்க முடியும். இது, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகம்!!  இது குவாண்டம் கம்பியூட்டிங்கில் பயன்படும், மின்னல் வேக சூப்பர் ஃபாஸ்ட் கணினிகள் சாத்தியமாகும்.  அடுத்த விண்டோஸ் ரிலீசுக்கு இது வந்து விடுமா? அதுதான் கொஞ்சம் கடினம்!! அது நடைமுறைக்கு வர கொஞ்சம் காலம் பிடிக்கும். தற்போது உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால் உங்கள் மகன் திருமணத்துக்கோ அல்லது பேத்தியின் வளைகாப்புக்கோ அது நடைமுறைக்கு வரலாம்!!




அடுத்து,  தற்போது அறிவியலில் யாரும், பழங்காலத்து ஊசல் கடிகாரங்களை பயன்படுத்துவதில்லை, சீசியம் அணு அதிர்வு நேரத்தை வைத்து செயல்படும் துல்லியமான கடிகாரங்களே பயன்படுத்தப் படுகின்றன. தற்போது டேவிட் வைன்லான்ட் தான் கண்டுபிடித்துள்ள பண்புகளைப் பயன்படுத்தி இதை விட பல மடங்கு துல்லியமான கடிகாரங்களை அவர் பணிபுரியும் தேசிய தரக் கட்டுப்பாடு நிறுவனத்திற்கு [NIST] ஏற்கனவே உருவாக்கியுள்ளார் !!  எவ்வளவு துல்லியம்? சரியான நேரத்தை வைத்து ஓடவிட்டால்,  300 கோடி வருடங்கள் கழிந்த பின்னர் தான் அதிலிருந்து ஒரு வினாடி கூடுதலாகவோ குறைவாகவோ காண்பிக்கும்!!


மேலதிகத் தகவல்கள்:




Serge Haroche, French citizen. Born 1944 in Casablanca, Morocco. Ph.D. 1971 from Université Pierre et Marie Curie, Paris, France. Professor at Collège de France and Ecole Normale Supérieure, Paris, France.
www.college-de-france.fr/site/en-serge-haroche/biography.htm 




David J. Wineland, U.S. citizen. Born 1944 in Milwaukee, WI, USA. Ph.D. 1970 from Harvard University, Cambridge, MA, USA. Group Leader and NIST Fellow at National Institute of Standards and Technology (NIST) and University of Colorado Boulder, CO, USA
www.nist.gov/pml/div688/grp10/index.cfm
 
அன்புடன் 
சாதிக் கட்டமீரான் 

29) நிலவின் மறுபக்கத்தை ஏன் நம்மால் காண முடிவதில்லை?

துணைக் கோள்கள் ஒரு அறிமுகம்:
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுக்கும் கிட்டத் தட்ட 140  சந்திரன்கள் உள்ளன. ஜுபிட்டர்-மொத்தம் 62 சந்திரன்கள், சனி-33 சந்திரன்கள்,  புதன், வெள்ளி கிரகங்களுக்கு சந்திரன்கள் இல்லை.  இவற்றில் நமது சந்திரன் அளவில் ஐந்தாவது பெரிய துணைக்கோள் ஆகும்.  மற்ற நான்கும் ஜூபிடர், சனி போன்ற பெரிய கிரகங்களைச் சுற்றுகின்றன.  கோளின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது துணைக்கோள்கள் மிகவும் குட்டியாக உள்ளன, ஒரே ஒரு விதி விளக்கு பூமியும் சந்திரனும் மட்டுமே.  பூமியின் அளவுக்கு ஒரு பந்து செய்து அதற்க்கு சந்திரனைப் போல 49 கோலிகளைப் போடலாம். பூமியை ஒரு தராசில் வைத்து அந்தப் பக்கம் 81 1/2 சந்திரன்களை வைத்தால் முள் சமாமாகக் காட்டும். நிலவின் விட்டம் 3,476 கி.மீ. சந்திரன் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது, குறைந்த பட்ச தூரம் 3,63,300 கி.மீ. பட்ச தூரம் 4,05,500  கி.மீ. பூமியை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் 29.5 நாட்கள். 

மனிதனுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து பெண்ணின் முகத்தை அவன் தவறாமல் ஒப்பிடுவது நிலவுக்குத்தான்!!  கீழே அவள் முகத்தை பாருங்கள்...........


முதல் பிறை to அமாவாசை அத்தனை நாட்களும் எடுக்கப் பட்ட நிலவின் படம்.  இதை உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு விஷயம் புரியும், நிலவு தினமும் வளர்ந்து தேய்ந்தாலும் நமக்குத் தெரிவது ஒரு முகம் மட்டுமே!! ஏன் அவள் தன்னுடை இன்னொரு முகத்தைக் கட்டுவதே இல்லை???


 நம்மால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே எப்போதும் பார்க்க முடியும், அதன் இன்னொரு பக்கத்தை பார்க்கவேமுடியாது, காரணம் என்ன?  ஒரு வேலை நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லையோ?   அதுதான் இல்லை.  நிலவு தன்னைத் தானே நிச்சயம் சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றி வருகிறது.  அப்புறம் ஏன் அதன் மறுபக்கம் நமக்குத் தெரிவதில்லை? காரணம் இருக்கிறது!! நிலவு தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கும் பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கும் ஆகும் காலம் சமமாக இருக்கிறது [29.5 நாட்கள்] ஆகையால் நாம் நிலவின் ஒருபக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


நிலா தன்னைத் தானே ஒரு முறை சுட்டிக் கொள்வதற்கும் பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கும் ஆகும் காலம் சமமாக இருக்கிறது [29 நாட்கள்] ஆகையால் நாம் நிலவின் ஒருபக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறு அல்லாது, அது தன்னைத் தானே சுற்றாமல் பூமியை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்திருந்தாலோ அல்லது ஒரு முறை பூமியை சுற்றி வருவதற்குள் அதன் தற்சுழற்சி ஒரு தடவைக்கு மேல் இருந்திருந்தாலோ அதன் மறுபக்கத்தை நிச்சயம் நம்மால் பார்த்திருக்க முடியும், ஆனால் உண்மையில் அவ்வாறில்லை என்பதை பின்வரும் காணொளி காட்டுகிறது.






அதுசரி,  பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் 365 1/4 முறை தன்னைத் தானேயும் சுற்றிக் கொள்ளும்போது,  பூமியை ஒரு முறை சுற்றி முடிக்கும் நிலவுக்கு மட்டும் அது ஏன் ஒரே ஒரு முறை?  நல்ல கேள்விதான். உண்மையில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிலவும் பூமியைப் போலவே, ஒரு சுற்று முடிப்பதற்குள், பலமுறை தற்சுழற்சியையும் முடிக்கும் வண்ணம் வேகமாக சுழன்றுகொண்டு தான் இருந்தது.  காலப் போக்கில் இந்த வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 29.5 நாட்களுக்கு வந்து Tidal Lock ஆகி எப்போதும் ஒரே முகத்தையே நமக்கு காண்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.  இதற்க்கு காரணம், சூரிய  குடும்பத்தில் எல்லா பிரச்சினைக்கும் காரணமாயிருக்கும் அதே போக்கிரி பொருளீர்ப்பு விசைதான்!!  [Gravitational force] அப்படி என்ன தான் அது செய்தது?


பூமியின் வட துருவத்துக்கு மேலே இருந்து பார்க்கும்போது,  நிலவு தன்னைத் தானே இடஞ்சுழியாகச் [Anti Clockwise] சுற்றிக் கொண்டே பூமியையும் அதே வகையில் இடஞ்சுழியாக சுற்றி வருகிறது.  ஆனாலும், நிலவு கிழக்கில் உதித்து மேற்க்கே மறைவது போலத் தோன்றுகிறது, காரணம் பூமி வேகமாகச் சுழல்வதே.  நிலவு பூமியைச் சுற்றி வர ஆகும் காலத்தில் பூமி தன்னைத் தானே 29.5 முறை சுற்றி  முடித்து விடுவதால் இவ்வாறு தோன்றுகிறது.

பொருளீர்ப்பு விசை [Gravitational Force], தொலைவு r  ஐப் பொறுத்து 1/r^2 என்ற விகிதத்தில் குறைந்துகொண்டே செல்லும்.  அதாவது தரையில் நாம் நின்று கொண்டிருந்தால், புவிஈர்ப்பு விசை நமது காலில் அதிகமாகவும், தலைப் பகுதியில் சிறிது குறைவாகவும் இருக்கும்.  ஆனால், இந்த மாற்றம் ஆறடி மனிதனுக்கு உணரத் தக்க அளவுக்கு பெரிதாக இருக்காது. ஆனால் 3,474 கி.மீ. விட்டமுள்ள நிலவு போன்ற பெரிய உருவங்களுக்கு இந்த வித்தியாசத்தை புறக்கணிக்க முடியாது.  பூமிக்கு அருகாமையில் உள்ள பக்கத்திற்கும், அதற்க்கு நேர் எதிரே உள்ள பக்கத்திற்கும் இடையே பொருளீர்ப்பு விசையில் உள்ள வேறுபாட்டால்,  நிலவின் மேற்ப்பரப்பு இருபுறமும் அரை மீட்டர் [55 செ.மீ] மேலே எழும்பி நீள்வட்ட வடிவைப் பெறுகிறது.  [மேலே உள்ள படத்தில்  நிலவின் A நிலையை கவனியுங்கள்.]   இதை ஆங்கிலத்தில் Tides என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த எழுச்சி  பூமி நிலவு இரண்டின் மையத்தையும் இணைக்கும் கோட்டைப் பொறுத்து சமச்சீராக [Symmetrical] இருக்கும்.  ஆனால், நிலவு B என்ற நிலைக்கு சற்றே நகர்ந்தால் இந்த சமச்சீர் நிலை மாறிவிடுகிறது,   அது நகர்ந்து மீன்றும் பூமி நிலவை இணைக்கும் கோட்டிற்க்கு சமச்சீராக ஆக சற்று தாமதமாகும்.  அந்த தாமதமாகும் நேரத்தில் உயர்ந்த நிலப்பரப்புகளை [நீல வண்ணத்தில் உள்ளவை] பூமி ஈர்க்கிறது, இதில் 1,2 என்ற இரண்டு பகுதிகளையும் ஈர்க்கும் பொது, அதில் 1 -ன் மீதான விசை நிலவின் தற்ச் சுழற்சிக்கு எதிர் திசையிலும் 2 ன் மீதான விசை நிலவு சுழலும் திசையிலும் இருப்பதால் இரண்டும் ஒன்றை ஒன்று சமன் செய்து விடலாம், அனால் 1 பூமிக்கு அருகில் இருப்பதால் அது ஜெயித்து, நிலவின் சுழற்சி வேகத்தை சற்றே மட்டுப் படுத்துகிறது.  மேலும் மேலெழும்பிய பரப்பு [நீல வண்ணத்தில் உள்ளது] நிலவின் சுழற்சிக்கேற்ப்ப மாறிக்கொண்டே இருப்பதால் சுழலும் ஆற்றல் வெப்பமாக மாற்றப் பட்டும் வேகம் மட்டுப் படும்.  இவ்வாறு சில நூறு கோடி ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை இழந்து சுழலும் வேகமும் குறைந்து இன்றைய வேகமான 29.3 நாட்களுக்கு ஒரு தற்சுழற்சி வந்து Tidal Lock ஆகி   விட்டது.  நிலா அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ திருப்ப முயன்றால் ஒரு இடி இடித்து அதே பக்கம் தன்னை நோக்கி இருக்குமாறு பூமியின் ஈர்ப்பு விசை செய்துவிடும்.


இது ஏதோ பூமிக்கும் நிலவுக்குமிடையே மட்டுமே நிகழ்ந்த ஒன்று என நினைக்க வேண்டாம்.  செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் இரண்டு சந்திரன்கள் [ஃபோபோஸ், டெய்மோஸ்], ஜூபிடரைச் சுற்றும்  சந்திரன்களில் டஜனுக்கும் மேற்ப்பட்டவை, சனி கிரகத்தின் பல சந்திரன்கள், யுரேனஸ், நெப்டியூன்  கிரகத்தின் எல்லா துணைக்கோள்கள் என இத்தனையும் நமது சந்திரனைப் போலவே கிராவிட்டி பிணையில் [Gravity Lock /Tidal Lock ] மாட்டிக் கொண்டு ஒரே முகத்தை மட்டுமே அவற்றின் கோள்கள் பக்கம் திரும்பிய வண்ணம் சுற்றிக் கொண்டிருக்கின்றன.  சனி கிரகத்தின் ஹைபரையான் [Hyperion]  இந்த மாதிரி கட்டுக்குள் இன்னமும் வரவில்லை என்பது ஆறுதல்!!




நாம் எப்போதும் பார்க்கும் நிலவின் முகம்.



நாம் பார்த்திராத நிலவின் முகம்.  நிலவின் மறுபக்கத்தை முதன் முதலாக ரஷ்யாவின் லூனா-3 என்ற விண்கலம் 1959 ஆம் ஆண்டு படமெடுத்தது.


 சரி பூமி மட்டும் தான் நிலவை இந்த மாதிரி முகத்தை திருப்ப விடாமல் செய்யுமா?   நிலவு பூமியின் மேல் எந்த தாக்கத்தையும்  செலுத்தாதா? ஆம், செலுத்துகிறது.  நிலவு, சூரியன் இரண்டும் சேர்ந்து பூமியின் மேல் அதிகாரம் செலுத்தத்தான் செய்கின்றன.  பூமியில் உள்ள நிலம்,நீர் மற்றும் காற்று ஆகிய மூன்றின் மேலும் இவற்றின் ஈர்ப்பு விசை செயல் பட்டு, மேலே சொன்ன அதே முறையில் பூமியில் Tides என்னும் பேரலைகளை ஏற்படுத்துகின்றன,  இவற்றில் நீரில் ஏற்ப்படும் பேரலைகளை மட்டுமே நாம் உணர முடிகிறது, மற்றவை நாம் உணரா வண்ணம் நடக்கிறது.  இவற்றின் காரணத்தால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்த வண்ணம் உள்ளது.  ஒரு நாளின் அளவு நூறு வருஷத்துக்கு 1.7 மில்லி செகண்டுகள் அதிகரிக்கும்!!  சில நூறு கோடி ஆண்டுகள் கழித்து பூமியும்  ஒரே ஒரு முகத்தை மட்டுமே நிலவுக்குக்  காண்பிக்கும்,  அப்புறம் போகப் போக பூமி சூரியனுக்கே ஒரே ஒரு முகத்தைக் காண்பிக்கும் காலம் வந்துவிடும்!!
 
 
அன்புடன் 
 
சாதிக் கட்டமீரான் 

28)....1,2,3,4.......... அரபு எண்கள் வடிவம் பெற்றது எப்படி?

நாம் இன்று உலகெங்கும் பயன்படுத்தும் 1,2,3......  என்ற எண்கள் அரேபிய முறையில் எழுதுவதாகும்.  இவை இவ்வடிவம் பெற்றது தற்செயலா, அல்லது ஏதாவது காரணம் இருக்கிறதா?  தற்செயல் அல்ல காரணம் இருக்கிறது.




நாம் பயன்படுத்தும் இன்றைய வடிவம், ஆரம்ப காலத்தில் பயன் படுத்திய வடிவத்துடன்  கிட்டத் தட்ட ஒத்துவருகிறது.  ஒரே திசையில் செல்லாத இரண்டு கோடுகள் சந்திக்கும் புள்ளியில் கோணம் ஏற்படுகிறது.  ஒவ்வொரு எண்ணும் அதனுள் அடங்கிய இத்தகைய கோணங்களின் [Angles] எண்ணிக்கையே அந்த எண்ணின் மதிப்பும் ஆகும்.  இதை கீழ்க் கண்ட படங்கள் விளக்குகின்றன.


 

சுழியில் எந்த கோணமும் இல்லை!!  ஆனால் இந்த எண்ணைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.

 
 
அன்புடன்
 
சாதிக் கட்டமீரான் 


Friday, July 5, 2013

27. இதைப் புந்ரிது கொள்ள முகிடிறதா?

நீகங்ள் நிப்னைபதை விட உகங்ள் மூளை புந்ரிது கொளுள்ம் வேகம்  அகதிம்!

உகங்களால் கீகழ்ண்ட ஆகிங்ல வாத்ர்தைகளைப் புந்ரிது கொண்டு வாக்சிக முகிடிறதென்றால் அதாசரன மூயுளைடைவர்ளிகள் நீகங்ளும் ஒருவர்! எத்ழுதுக்களின் வரிசை எபப்டி இந்ருதாலும் சொகற்ளைப் புந்ரிது கொளுள்ம் ஆறற்லை மதனிமூளை பெறிற்ருப்பதாக Cmabrigde Uinervtisy ஆய்வு சொகில்றது.

முகிக்யமாக முதல் மறுற்ம் கடைசி எத்ழுதுக்கள் மடுட்ம் ஒங்ழுகாக இந்ருதாலே போதும்! நமது மூளையால் அக்தைகிரகித்துக் கொண்டு புந்ரிது கொளள் முயுடிமாம்! ஏன்னெறால் மதனிமூளை,சொகற்ளின் ஒவொவ்ரு எத்ழுத்தாகப் பப்டிபதில்லையாம்! இவாவ்ய்வு எல்லா மொகழிகளுக்கும் பொந்ருதுமா என்று தெயரிவில்லை.

I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? Yaeh, and I awlyas tghuhot slpeling was ipmorantt! If you can raed this forwrad it.

தழிமில் நுப்னிபுல் மேதய்ல் எபான்ர்களே! அற்தகும் இற்தகும் சபம்ந்தம் உண்டா என்று தெயரிவில்லை. தெந்ரிதவர்கள் விக்ளக்கினால் நல்லது


அபுன்டன் 
சாதிக் கடட்மீரான் 

Wednesday, July 3, 2013

26. நம்மளை கேனப்பயலாக்கும் தொலைக் காட்சி விளம்பரங்கள்!

புகாரி
2087. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(
பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!"

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2126. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"
ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக) அவரின் கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது!"

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2140. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"
கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!" என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!"

2142. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"
நபி(ஸல்) அவர்கள் மோசடியாக ஏலம் விடுவதைத் தடை செய்தார்கள்.
2144. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
"
நபி(ஸல்) அவர்கள் 'முனாபதா' வியாபாரத்தைத் தடை செய்தார்கள்! 'முனாபதா' என்பது. ஒருவர் தம் துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து (விட்டால் அதை அவர் வாங்கியாக வேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும்! மேலும், 'முலாமஸா' எனும் வியாபாரத்தையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! 'முலாமஸா'
என்பது துணியை (விரித்துப் பார்க்காமலேயே அதை) தொட்டவுடன் (வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன்) விற்பனை செய்வதாகும்!"
 
                   இஸ்லாத்தில் இது போல நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் வியாபாரம் எவ்வாறு நியாமாகவும், நேர்மையாகவும், செய்ய வேண்டும் என 1500 ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு வியாபார நியதிகளை கற்ப்பித்துக் கொடிருக்கின்றன 
     ஆனால் வியாபாரம் இன்று பொய், பித்தலாட்ட, மோசடிகளின் பாசறையாகவே மாறிவிட்டன! இதற்கு உறுதுணையாக இருப்பது தொலைக் காட்சி விளம்பரங்கள் தான்!!
 
தொலைக் காட்சி விளம்பரங்கள்: என்னதான்யா சொல்ல வர்றானுங்க?
 

பொருள் தரமானதா இல்லை கேவலமானதா என்பது முக்கியமில்லை, அதை நல்லா விளம்பரப் படுத்தினா போதும் ஓஹோன்னு ஓடும்.  விளம்பரம் இல்லையென்றால் இன்றைக்கு கிரிக்கெட்டே இல்லை.  இவனுங்க ஆடி சம்பாதித்தை விட விளம்பரங்களில் நடித்து சம்பாதித்ததே அதிகம். இது கிரிக்கெட் ஆட்டக் காரர்களுக்கு மட்டுமல்ல சில நடிகை/நடிகர்களுக்கும் பொருந்தும்.   கிரிக்கெட் வீரர்கள் யாரும் கோலாக்களை குடிப்பதில்லை என்பதும் எல்லா ஷாம்பு, சோப்பு விளம்பரங்களில் வரும் நடிகைகள் தலைக்கு சீயக்காய் பொடியையும், உடலுக்கு கடலைமாவு+பயத்தம் மாவை மட்டுமே பூசி குளிக்கிறார்கள் என்பதும் நம்மை போன்ற பல எமாளிகளுக்குத் தெரியாது!!   இப்படியெல்லாம் நம்மை முட்டாள்களாக்கும் தொலைகாட்சி விளம்பரங்களில் இருந்து நமக்கு தெரிய வரும் முக்கியமான விஷயங்கள் சிலவற்றை இன்னைக்கு பார்ப்போம்!! 


1.  கரீனாவுக்கு பொடுகு, கத்ரினாவுக்கு வறண்ட முடி, ஷில்பாவுக்கு முடி கொட்டுதல், பிரியங்காவுக்கு சிப்-சிப்   இதெல்லாம் இவங்களுக்கு இருக்குதுன்னு நமக்கு விளம்பரங்கள் மூலமாத்தானே தெரிஞ்சது!!

[chip-chip]- அப்படின்னா என்னன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா!!]
2.  Deodorant போடுவதே பொண்ணுங்களை மடக்கத்தான்.
3. டூத் பேஸ்ட் எதை எடுத்தாலும், அதேதான் எல்லா பல் டாக்டர்களும், DENTAL ASSOCIATION OF INDIA வும் பரிந்துரைக்கும் பிராண்டாம். 
4. பொண்ணு கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரஸ்ட் காமிக்கலைன்னா நகைக் கடைக்கோ, துணிக்கடைக்கோ கூட்டிட்டுப் போய்க் காண்பிச்சா போதும், உடனே சம்மதிச்சுடுவா பிரச்சினை ஓவர்.

5. கப்சியும், அக்காமாலாவையும் குடித்து வந்தால் போதும் கவலையெல்லாம் பறந்து போகும், சீக்கிரமே சூப்பர்மேன் ஆயிடலாம்.

6. பெரிய பெரிய நடிகர்களாக இருந்தாலும் பாவம் ஏழைப் பட்டவர்கள், பத்து ரூபாய் கூல் டிரிங்க்ஸ்க்காக உசிரையே பணயம் வைப்பார்கள்.
7. ஷாம்பு விளம்பரத்தில் வரும் SPECIAL EFFECTS எல்லாம் அவதார் படத்தையே தூக்கி சாப்பிட்டு விடும்.
8. அமுல் கம்பனியில், பால் பொருட்கள் உற்பத்தி செய்யிறதுக்கு இருக்கும் எக்ஸ்பர்ட்சை விட கார்ட்டூன் வரையும் திறமைசாலிங்களை அதிகமா இருப்பாங்க போலிருக்கு.

9. பைக் வாங்குவதே பொண்ணுங்களை பிக் அப் பண்ணத்தான். 
 
10. எந்த சோப்பை எடுத்துக் கொண்டாலும் அது 99.9% கிருமிகளை அடியோடு ஒழித்துக் கட்டுவதாகவே இருக்கும்.

11. Bacardi என்பது இசை குறுந்தகடுகளை தயார் பண்ணும் கம்பனி என்றும், Directors special/Kingfisher என்பது மினரல் வாட்டர் தயாரிக்கும் கம்பனி என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
12. இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திட்டா நாம செத்ததுக்கப்புறம் பெண்டாட்டியும் பிள்ளைகளும், சந்தோஷமா இருப்பாங்க. 

13. குழந்தைகள் சேற்றில் விழுந்து புரண்டு வெள்ளை யூனிபார்ம் முழுசும் பழுப்பு கலரில் ஆன பின் வீட்டுக்கு வந்தா அம்மா "கரை நல்லது" ன்னு ரொம்ப சந்தோசப் படுவாங்க.

14. ஒரு அம்மாவும் அவங்க மகளும் எப்போ பேசினாலும் தலைக்கு பூசும் எண்ணையைப் பத்தியேதான் பேசுவாங்க. .

15. எந்தக் காரை எடுத்தாலும், அதுதான் நம்பர் 1 பிராண்டு என்று அதன் "SATISFIED CUSTOMERS" சொல்வார்கள். 
16. கருப்பா பொறந்ததே பாவம். 
17. No matter what kind of expert one is, he'll always wear a white laboratory coat.

18. ஏழு நாளில் சிவப்பழகு மாதிரி ஏதாவது கிரீமை போட்டால் தான் ஒரு பொண்ணு மிஸ் இந்தியாவாகவோ, உலக அழகியாகவோ வர முடியும். 
19. ஒரு பொண்ணுகிட்ட லவ்வை சொல்ல துணிச்சலை விட நல்ல வாசனை அடிக்கும் ஒரு deodorant இருந்தாலே போதும்.
20. மூஞ்சியில் சளார்... ன்னு தண்ணீரை அடிச்சாத்தான் அதுக்கப்புறம் முகத் தோல் எப்பவுமே கிளியரா இருக்கும். 
மேலே குறிப்பிட்ட பொய் பித்தாலாட்டங்களை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தி multinational கம்பெனிகள் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டிருகின்றன 
இந்த பொய் பித்தாலாட்ட தொலைக் காட்சி விளம்பரங்களுக்கு ஹீரோவா வர்றவங்க யாருன்னு நினைகிறேங்க ? ம்ம்ம் மேலே படியுங்க!
 


"மேலே இருக்கும் படத்தில் வலது புறம் இருப்பது யாரு?" அப்படின்னு கேட்டா, "இதெல்லாம் ஒரு கேள்வியா, அவருதான் ஹிந்தி சூப்பர் ஸ்டார் என்று சின்னக் குழந்தையும் சொல்லுமே" என்பீர்கள்.   அவர் ஒரு தலை சிறந்த நடிகர் அப்படின்னு மட்டும்தான் நீங்க நினைச்சுகிட்டு இருந்திருப்பீங்க.  ஆனா, அது உண்மையில்லை!!  அவர் நடிக்கவும் செய்கிறார் என்பதென்னவோ உண்மைதான், ஆனால் அவர் நடிகர் இல்லை.  முதன்மையில் அவர் சேற்றில் விழுந்து பாடுபடும் ஒரு ஏழை விவசாயி!!  விவசாயம் தான் அவர் உயிர் மூச்சே. நடிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இதை வேற யாரும் சொல்லவில்லை, அவர் வாயாலே சாரி........  எழுத்தால சட்டத்துக்கு முன்னாடி தெரிவித்த தகவல்தான் இது!  "ஐயய்யோ, அப்ப இடதுபக்கம் குடை பிடிச்சுகிட்டு நிக்கிறவர் யாரு? தோட்டக்காரனா?"  அதைப் பத்தி தானே இந்தப் பதிவில் பார்க்கப் போறோம்!!  அதுசரி ரெண்டுபேரும் கையில என்னமோ வச்சிருக்காங்களே அது என்ன?  அது ஊட்டச் சத்து மிக்க பானம், இதைக் குடிச்சா எழும்பெல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுமாம். அதை கிழவனும் குடிச்சிட்டு தெம்பா இருக்கலாம்னு விவசாயி சொல்றாரு, இன்னொருத்தர், இதில் பத்து பாட்டில் தினமும் உள்ளே தள்ளுவது  தான் "சீக்ரெட் ஆ ஃ ப்  மை எனர்ஜி"  அப்படிங்கிறார்.  [காசை வீசி எரிஞ்சா பொறுக்கிக்கிட்டு நாய் மூத்திரம் நல்லதுன்னு சொல்றதுக்கும் ஆளுங்க ரெடியா இருக்காங்க, அதப் பாத்திட்டு தண்ணீருக்குப் பதிலா  நாய் மூத்திரமே தான் வேணுமின்னு தேடித் தேடி காசு குடுத்து வாங்கி குடிக்க நாம் இருக்கோம்.]
சரி அதெல்லாம் போகட்டும்.  விஷயத்துக்கு வருவோம்.   இப்போ நாம் பார்க்கப் போவது, 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் நடந்த ஒரு சங்கதி.  டெண்டுல்கர் அந்த வருடங்களில் ESPN Star Sports, PepsiCo மற்றும் Visa ஆகிய நிறுவனங்களில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவானியாக [Foreign currency] Rs.5,92,31,211 [ரூபாய் ஐந்து கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்தி சொச்சம்] பெற்றிருக்கிறார்.  இந்த வருமானத்திற்காக அவருக்கு வருமான வரியாக ரூ.2,08,59,707 [ரூபாய் இரண்டு கோடியே  எட்டு லட்சத்தி சொச்சம்] செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் விட்டனர்.

இதை எதிர்த்து நம்ம பூஸ்ட் மட்டும் குடிக்கும் பாப்பா என்ன பண்ணுச்சு தெரியுமுங்களா?  ஐயா, இந்த  CIT-A எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காருங்க.  அது நெசமில்லீங்க.  அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க, நடிப்புதான் பிரதான தொழிலுங்க.  கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க.  அதனால என்னோட தொழில் மூலமா சம்பாரிச்ச பணத்துக்கு u/s 80RR of the Act படி வரிச்சலுகை குடுங்க அப்படின்னு கேட்டுச்சு.  இதை விசாரிச்ச ஆணையமும், "ஆமாங்க இவர் ஒரு நடிகர்தான், நடிப்பு எல்லாத்தலும் முடியாது, மூஞ்சியில பவுடரை பூசிகிட்டு, வெப்பத்தை உமிழும் மின் விளக்குகள் முன்னாடி நின்னு சொந்தக் கற்பனை, படைப்பாற்றல் எல்லாம் பயன்படுத்தி நடிச்சு தெறமையைக் காட்டி மக்களை கவர்வது லேசு இல்ல, இவரு நெசமாவே நல்ல நடிகன் தான்" அப்படின்னு சான்றிதழ் குடுத்து கேட்ட இரண்டு கோடி சொச்ச வரிச்சலுகையும் குடுத்துடுச்சு!!  அதனால, இன்னைக்கு TV விளம்பர நடிகரா தொழில் பண்ணும் இவர் நாளைக்கு ஹாலிவுட் படத்தில வாய்ப்பு வந்து நடிச்சு தெறமை காட்டி ஆஸ்கார் கூட வாங்கினாலும் ஆச்சரியப் பட என்ன இருக்கு?  ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெறுவதை அறிவித்த போது இவர் கண்ணீர் விட்டிருக்காரு.  அது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்த வருத்தத்தாலா, சினிமாவில் வருவது மாதிரி நடிப்பா, இல்லை கிரிக்கெட் ஆடும் வாய்ப்பை  இழந்து விட்டோமே, இனிமே இந்த அளவுக்கு விளம்பரங்களில் நடிச்சு பணத்தை மேலும் சேர்ப்பது இயலாதேன்னு துக்கமாங்கிறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

செய்திகள்
சுட்டி 1 சுட்டி2


இன்னொரு நிகழ்வையும் நாம் இங்க சொல்லணும்.  இது 2002-03 வாக்கில் நடந்தது.  அப்போது டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மாபெரும் கிரிகெட் வீரர் மறைந்த டான் பிராட்மன் அவர்களின் டெஸ்ட் சாதனையான 29 சதங்களை சமன் செய்தார்.  இதைப் பாராட்டி ஃபியட் நிறுவனம் அவருக்கு  '360 Modena Ferrari' என்ற 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க விரும்பியது. காரை சும்மா குடுக்க அவன் என்ன இனா வானாவா?  டெண்டுல்கர் மைக்கேல் ஷூ மேக்கர் என்னும் கார் ரேஸ் வீரருடன்  இணைந்து அந்தக் காரின் விளம்பரத் தூதுவராகவும் இருப்பார்.  2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில்,  சில்வர்ஸ்டோன்  என்னுமிடத்தில் இருவரும் சந்தித்த போது  ஷூ மேக்கர், ஃபியட் சார்பில் டெண்டுல்கருக்கு அந்தக் காரை பரிசளித்தார்.


அதை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமே?  ஆடு அரைப்பணம், ......க்கு  முக்கால் பணம் என்னும் கிராமத்து பழமொழி இங்கே வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கார் கிரிக்கெட் விளையாடி பரிசாகப் பெற்றது அல்ல.  எனவே அதை இந்தியாவுக்குள் கொண்டு வர அதன் விலையில் 120% வரியாகச் செலுத்த வேண்டும்.  அதாவது ஒரு கோடியே பதிமூணு இலட்சம் ரூபாய்கள்.  ஒன்னும் தெரியாத நம்ம பாப்பா குடுக்குமா?  வரிச்சலுகை கேட்டுச்சு.  நிதியமைச்சகமும் என்னென்னமோ பண்ணி 2003 ஆம் வருடம் சலுகை கொடுத்தது.


நம்ம பாப்பா சில வருடங்கள் அந்தக் காரை வச்சிருந்து விட்டு அப்படியே சூரத்தில் இருக்கும் ஜெயெஷ் தேசாய் என்ற ஒரு வியாபாரிகிட்ட அதைத் தள்ளிட்டு காசாக்கிடுச்சு.  டேய் எவ்வளவுடா குடுத்தேன்னு அவனைக் கேட்டா, "இந்தாபா, காரைப் பத்தி என்ன வேணுமின்னாலும் கேளு, ஆனா எம்புட்டு குடுத்தே, அந்த பாசக்கார பூஸ்டு பேபிய உனக்கு எப்படி தெரியும், அது இதுன்னு கேட்கிறா மாதிரியா இருந்தா எடத்தை காலி பண்ணு" அப்படிங்கிறான்.  அவனுக்கு இதே காரை புதுசாவே வாங்க முடியுமாம்.  ஆனாலும், மைக்கேல் ஷூ மேக்கர்,  டெண்டுல்கர் அப்படின்னு ரெண்டு கர்.... கர்.... சம்பந்தப் பட்ட இதை நான் புர்.... புர்.... என்று ஓட்டினா அதுவே போதும், வாழ்வே வெற்றிங்கிறானாம்!!
அன்புடன் 
சாதிக் கட்டமீரான்