Do not mix up truth with falsehood and knowingly hide the truth. Holy Qu’ran(2:42)

Saturday, June 29, 2013

22.டார்வினின் கறுப்புப் பெட்டி - பகுதி - II



மேலே நீங்கள் படத்தில் காண்பது ஒரு மோட்டார்.  இது ஒரு மின்சார மோட்டரைப் போன்றது. இதில்,

Propeller- உந்தித் தள்ள உதவும் துடுப்பு   [படத்தில் Filament] 
Universal Joint-      இது Propeller-ஐ, மோட்டருடன் இணைக்க L வடிவ இணைப்பு,
Rotor-சுழலும் பகுதி
Stator -இது Rotor சுழல உதவும் நிலையான பகுதி
Drive Shaft with Bushings- சுழலும் பகுதியைத் தாங்கி நிற்கும் அச்சாணி, அடி விழாமல் பாதுகாக்கும் புஷ் அமைப்புடன்.

என அத்தனையும் உண்டு.





இதன் சுழற்சி வேகம் கொஞ்சம் ஜாஸ்தி!!  அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு லட்சம் தடவை வரை சுழல வல்லது!!  அவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் ஒரு முழு சுற்றில் கால் பகுதி முடிவதற்குள் இது சுழலுவதை நிறுத்த முடியும், பின்னர் எதிர்புறம் அதே வேகத்தில் உடனடியாகச் சுழலவும் முடியும்.  இதன் மூலம் மோட்டார் இணைக்கப் பட்டுள்ள பொருள் செல்லும் திசையை மற்ற முடியும்.  இந்த மோட்டார் H + அயனிகளை  [ஒரு ஹைட்ரஜன் அணுக்கரு அதாவது புரோட்டான்கள்!!]  எரிபொருளாகப் பயன்படுத்தி இயங்குகிறது. இதன் செயல்திறன் [Efficiency] 99% -க்கும் மேல், 100% -க்கும் அருகில்!!


இந்த மோட்டார்களின் சைஸ் தான் கொஞ்சம் சிறியது!!  நமது தலைமுடியின் தடிமனுக்குள் [Diameter] 80 லட்சம் மோட்டார்களை அடக்கிவிட முடியும்!!  அடடே அப்படினா நேனோ டெக்னாலஜி [Nano Technology] மாதிரி இருக்கேன்னு  உங்களுக்கு பொறி  தடுகிறதா!!   நீங்கள்   நினைத்தது   சரிதான்!!

அதுசரி இந்த மோட்டார்கள் எங்கே பயன்படுத்தப் படுகின்றன?   ஆரம்பத்தில் கல்லும் மண்ணுமாக இருந்த பூமியில் எளிய வடிவமைப்பைக் கொண்ட பாட்டீரியாக்கள் முதலில் தோன்றின என்று பரிணாம வாதிகள் சொல்கிறார்களே, அவற்றின் உடலில் தான் இவை காணப் படுகின்றன!! உண்மையில்  அவற்றின் உடலமைப்பு எளிதல்ல என்பதற்கு இது ஒன்றே மிகச் சிறந்த உதாரணம்.  பாக்டீரியாக்கள் நீந்திச் செல்ல இம்மோட்டர்கள் உதவுகின்றன.






கடைசியாக உள்ள படத்தில் நூலிழை போல உள்ள Flagellum பாக்டீரியா நீந்திச் செல்ல உதவுகிறது.  சில பாக்டீரியாக்களுக்கு இது ஒன்று மட்டுமே இருக்கும், ஆனால் பல Flagellum களைக் கொண்ட பாக்டீரியாக்களும் உண்டு.  இவற்றை ஒருங்கிணைந்து செயல்பட வைத்து  பாக்டீரியாக்கள் தங்கள் இயக்கத்துக்கு பயன்படுத்துகின்றன. 


இந்த மோட்டார் உருவாக மொத்தம் 40 வகை புரோட்டீன்கள் தேவைப்படும், அவற்றில் ஒன்று குறைந்தாலும் இந்த மோட்டார் இயங்காது, பாக்டீரியா நகராது, அவ்வாறு நகராமல் அதனால் உயிர் வாழ முடியாது.  எனவே இவை அத்தனையும் ஒரே சமயத்தில் தேவை என்பதால், பரிணாமம் நடந்திருக்க வாய்ப்பில்லை, ஒரே சமயத்தில் இது உருவானது என்று மைக்கேல் பேஹே [Michael Behe] என்ற உயிரியல் விஞ்ஞானி வாதிடுகிறார்.  மேலும் குறைக்க இயலாத சிக்கலான அமைப்பு [Irreducible Complexity] என்ற சொற்றொடரையும் இவர் அறிமுகப் படுத்தியுள்ளார்.  இதற்க்கு உதாரணமாக ஒரு எலிப்பொறியை இவர் காட்டுகிறார்.





ஒரு எலிப்பொறி அதன் பணியைச் செய்ய மேலே உள்ள படத்தில் உள்ள ஐந்து பாகங்களும் இருந்தால் மட்டுமே முடியும், அதில் ஒன்று இல்லையென்றாலும் அது பயன்படாது.  இதற்குப் பெயர்  மேலும் குறைக்க இயலாத சிக்கலான அமைப்பு [Irreducible Complexity.  மேலே சொன்ன மோட்டார் அதுபோல ஒரு அமைப்பு என்கிறார்.  இதற்க்கு எதிவாதம் செய்பவர்கள், ஏன் முடியாது வெறும் கட்டையை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தலாம், அதன் ஸ்ப்ரிங் சேர்ந்தால் கிளிப் போல பிடித்துக் கொள்ள பயன்படுத்தலாம் என்று அதை மறுக்கிறார்கள்.  மேலே சொன்ன மோட்டரைப் போலவே அச்சு அசலாக விஷத்தைச்  செலுத்தும் சிரிஞ்சு போன்ற ஒரு அமைப்பை சில பாக்டீரியங்கள் பெற்றுள்ளதைக் கட்டி, இதோ பாருங்கள் இது மேலே சொன்ன மோட்டாரில் உள்ளதைப் போல வெறும் 20 புரதங்ககள் மட்டுமே உள்ளன, ஆனாலும் அதற்கும் ஒரு பயன் உள்ளதே என்று ஆதாரம் காட்டுகின்றனர்.  இதை கீழே உள்ள கானொளியில் பார்க்கலாம்.




அட ஒரு சிரின்ஞ்சா கூடத்தான் இருக்கட்டுமே தானா எப்படிய்யா வரும்!!  எப்படியோ, எதை நம்புவது, எதை விடுவது என்பதே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


Irreducible Complexity பற்றிய மைக்கேல் பேஹே அவர்களின் டார்வினின் கறுப்புப் பெட்டி என்ற புத்தகம் மிகவும் புகழ் பெற்றது, அதைத் பதிவிறக்கிப் படிக்க இங்கே சொடுக்கவும்.

இப்படிக்கு
சாதிக் கட்டமீரான் 

21.பரிணாமம் அறிவியல்தானா? - பகுதி - I

அஸ்ஸலாமு அலைக்கும் 
 
 நான் பள்ளபட்டி ஹைஸ்கூலில் படித்துகொடிருந்த போது எங்க zoology வாத்தியார் ஷேக் சார்  அவர்களின் period அது. அவர் zoologyல் பரிணாமக் கொள்கையை பாடம் நடத்திக்கொண்டிருந்தார்   நான் பக்கத்தில் உட்காற்ந்துயிருந்த என் friend ரபிகிடம்பேசிக்கொண்டிருந்தேன், இதைப் பார்த்த ஷேக் சார், கோபமாக என்னை எழுந்து நிற்க சொல்லி, மனிதன் எதிலிருந்து பிறந்தான் என  திடிரென ஒரு கேள்வி கேட்டார். நான் சிறிது நேரம் முழித்து விட்டு, பிறகு சமாளித்து, மனிதர்கள் ஆதம் நபியிடமிருந்து பிறந்தார்கள் என அப்பாவியாக பதில் சொன்னேன். இதை கேட்ட அவர் மிகுந்த கோபத்துடன், மனிதன் குரங்கிலிருந்து பிறந்தாண்டா !! என  என்னை திட்டினார். நீ வட்டிக்கடைக்கு சேர்ந்து போகத்தான் லாயக்கு என என்னை வகுப்பை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
                    அல்லாஹ் ஆதம் நபியை படைத்து அவரிடமிருந்து மனிதர்களை  படைதானா? அல்லது குரங்கிலிருந்து படைதானா? அந்த வயதில் எனக்குதெளிவாக புரியவில்லை. நம்ம டங்கா முஸ்தாக்கு, அதற்கேற்ற மாதிரி எல்லா உயிரனமும், ஒன்னுலயிருந்து ஒன்னு உருமாறி உருவாகும்டு என்னை இன்னும் கொஞ்சம் குழப்பிவிட்டான். மண் புழுவிலிருந்துதான் மலை பாம்பு உருவாகுதுனு சொன்னான். நான் எப்படின்னு கேட்டேன். அவன் சொன்னான், ஒரு டப்பாவை எடுத்து, கொஞ்சம் தண்ணி ஊத்தி மண் புழுவை அதில் போட்டு, காத்து போகாமல் 40 நாள் மூடி வச்ச,  மண் புழு மலை பாம்பாயிரும்னு சொன்னான். அதே மாதிரி செஞ்சுட்டு, டங்காண்டெ சொன்னேன். அவன் வந்து டப்பாவை பாத்துட்டு, என்னடா  சின்ன  டப்பாவ வச்சுருக்கேன்டான். மண் புழு மலை பாம்பா  மாறுச்சுன டப்பா பத்துமாடா? அப்பறம், அவனே பெரிய டப்பாலே மண் புழுவை மாத்தி கொடுத்தான். ரண்டு பேரும் 40 நாள் காத்திருந்து, 40தாவது நாள் டப்பாவ திறந்தா நாத்தம் 4 வீடு தாண்டி நாறுது! எங்கம்மா நாத்தம் தாங்கம சமையல் கொற்றையிலிருந்து ஓடி வந்து, பேகளுச்சற வந்துருவாங்க என்னடா பன்றேங்கே திட்டி எங்களை வெளியே தள்ளிடாங்க. இது எவ்வளவு முட்டாள்தனமா  உங்களுக்கு தெரியுதோ அதை விட முட்டாள் தனமானதுதான்  இந்தா டார்வினின்  பரிணாமக் கொள்கை, மேல படியுங்க உங்களுக்கே புரியும்.   
          அறிவியலுக்கும், இஸலாத்திற்கும் எதிரான, மிக மோசமான கொள்கையில் முக்கியமானது டார்வினின் பரிணாமக் கொள்கைதான். இரண்டாம் உலகப் போரும், பேரழிவும், இக்கொள்கையை பின் பற்றியவர்களால் தான்  ஆரம்பிக்கப்பட்டது.  குரங்கினத்திலிருந்து மனிதன் வந்தான் என்ற முட்டாள்தனமான  கொள்கையை பள்ளிகளில் அறிவியல் பாடம்  என்ற பெயரில் வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்டது.
         
 
நாம் வாழும் இவ்வுலகில் நம்மைச் சுற்றிலும் அழகிய வடிவமைப்பைக் கொண்ட விதம் விதமான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளன.  இவை எப்படி உருவாயின?  இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன் படைத்தான் என்றே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  மக்கள் எண்ணி வந்தனர்.  1859 ஆம் ஆண்டு ஒரு ட்விஸ்டாக சார்லஸ் டார்வின் இந்த நம்பிக்கை மேல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  உயிர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெறும் இயல்பான பரிணாம வளர்ச்சி மூலம் உருவாயின என்றார்.  அதாவது, கடவுள் ஒன்றும் மனிதனைப் படைக்கவில்லை, மாறாக மனிதக் குரங்கு போன்ற மற்ற சிறிய விலங்கினங்களில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து உருவானான் என்றார்.  150 ஆண்டுகள் கடந்தபின்னர், இன்றைக்கும் உலகின் முக்கிய கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சியாளர்களிடமும் டார்வினின் பரிணாமக் கொள்கை பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்ற தேடலில் ஒரு முக்கிய கொள்கையாக விளங்கி வருகிறது.

இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.  பரிணாமக் கொள்கை வெறும் உயிரற்ற கல்லும் மண்ணுமாக இருந்த உலகில் முதல் உயிருள்ள செல் எவ்வாறு தோன்றியது என்பதை பற்றி எதுவும் கூறவில்லை.  மாறாக, ஒருசெல் உயிரி முதலில் இருந்தது, பின்னர் பலசெல் உயிரிகள் தோன்றின அவைற்றில் இருந்து பல்வேறு உயிரினங்கள் பரிணமித்துத் தோன்றின என்பதே பரிணாமக் கொள்கை.  முதன் முதலாக ஒன்று அல்லது சில உயிர்களுக்கு கடவுள் மூச்சைக் கொடுத்து உயிரை உண்டு பண்ணியிருக்கலாம் என்று டார்வின் சொன்னார்.   டார்வின் கடவுள் இருப்பதை இதன் மூலம் ஒப்புக் கொண்டாலும், பின்னர் வந்த பரிணாம வாதிகள் அதையும் நிராகரித்து படைப்பில் இருந்து கடவுளை மொத்தமாகவே நீக்கிவிட்டனர்.

இவ்வாறு 150 வருஷமா குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் இந்த பரிணாமக் கொள்கை  அறிவியல்பூர்வமானதுதானா என்று நாம் இங்கே அலசப் போகிறோம்.   இதற்கு காரணமும் இருக்கிறது.  மேற்கத்திய நாடுகள் பலவற்றில்  பொதுமக்களிடையே "பரிணாமக் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?" என்று வாக்கெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப் படுவதை நீங்கள் பலமுறை செய்திகளில் படித்திருக்கலாம்.   நாய் போன்ற விலங்கொன்று தான் தண்ணீருக்குள் சென்று திமிங்கலமா மாறியது, டைனோசர்கள் தான் பறவைகளாக மாறியது என ஒரு அறிவியல் கொள்கை விநோதமாக இருக்கிறதே என்று மக்கள் நம்ப மறுப்பதால் தான் இவ்வாறு வாக்கெடுப்பு எடுக்கப் படுவதாக நீங்கள் நினைத்தால் அங்கே தான் தப்பு செய்கிறீர்கள்!!  வினோதம் என்று பார்த்தால், குவாண்டம் கொள்கையும், ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையும் பரிணாமக் கொள்கையை விட பலமடங்கு விநோதமானவை.  நம் நடைமுறை வாழ்க்கையை வைத்துப் பார்த்தால் மண்டையை பீய்த்துக் கொள்ள வைக்கக் கூடிய கொள்கைகள் அவை. ஆனாலும், அவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று யாரும் வாக்கெடுப்பு நடத்தியதாகத் தெரியவில்லை.  ஆனால் பரிணாமக் கொள்கைக்கு அது நடக்கிறது.  காரணம் என்ன?  வேறொன்றுமில்லை, முன்னவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டவை, பரிணாமக் கொள்கை கற்பனையாகத் திரிக்கப் பட்டது, சல்லி ஆதாரம் கூட இதுவரையிலும் காட்டப் படாதது, கட்டுக் கதைகளையும், பொய்யையும் புனைசுருட்டுகளையும் வைத்தே 150 வருடங்களாக ஓட்டப் படும் ஒரே கற்பனை சினிமா இந்த பரிணாமக் கொள்கை.    இதனால் தான், பெரும்பாலான மக்களுக்கு  டார்வினின் கொள்கையில் நம்பிக்கை இல்லை, அதில் நம்பிக்கை உள்ளதா என்று வாக்கெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.

பரிணாமத்தில் பல வகை உண்டு.  அவையாவன:

Chemical Evolution:  [வேதிப் பொருட்கள் இணைந்து உயிர் உருவானதாக கருதுதல்].  இதன்படி முதலில் தனிமங்கள் [ஹைட்ரஜென், கார்பன் போன்றவை] இருந்தன, அவை சேர்ந்து மூலக்கூறுகளாயின, பின்னர் DNA, புரோட்டீன் தோன்றி ஒரு செல் உயிர் தோன்றின என்று சொல்கின்றனர்.

Biological Evolution:  [உயிரியல் ரீதியான பரிணாம வளர்ச்சி] இதன் பொருள், முதலில் தோன்றிய ஒரு செல் உயிர்களில் இருந்து பலசெல் உயிர்கள் என படிப்படியாக பரிணாமம் அடைந்து மீன்கள்,  தவளை, ஆமை, குரங்குகள் இறுதியாக மனிதன் என இன்றைக்கு நாம் காணும் அனைத்து உயிரினங்களும் தோன்றின என்பதாகும்.

Biological Evolution-னிலும் இரண்டு வகைகள் உண்டு அவை:
1. Micro Evolution & 2.Macro Evolution. 


Micro Evolution:  மைக்ரோ பரிணாமம் என்றால் ஒரு இனத்திற்குள்ளாக நடைபெறும் பரிணாமம்.  உதாரணத்திற்கு, நாய்களை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன.  சிலது மிகச் சிறியதாக உள்ளது, சிலது கன்றுகுட்டி சைசுக்கு வளர்கின்றன.  இது ஒரு இனத்தினுள் காணப்படும் மாறுபாடு.

 

Macro Evolution:  ஒரு உயிரினம் பரிணாமமடைந்து வேறொன்றாக மாறுவதாகச் சொல்வது.  இதில் மிகவும் பிரபலமானது மனிதக் குரங்கு மனிதனாக மாறியதாகச் சொல்லப்படும் கதை.   இதோடு நில்லாமல், நிலத்தில் திரிந்து கொண்டிருந்த கரடியைப் போல மாமிச உண்ணி ஏதோ ஒன்றுதான் திமிங்கலமாக மாறியது என்பது போன்ற அதிரடியான பல கோட்பாடுகளும் இதனுள் அடக்கம்!!

இத்தனை விதமான பரிணாமக் கோட்பாடுகள் இருந்தாலும், இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் ப ட்டு பின்னர் ஏற்கப் பட்டவைதானா என்பதே அலசுவதே நமது இந்தப் பதிவின் நோக்கமாகும்.   

விஞ்ஞான ரீதியான பரிசோதனை அப்படின்னா என்ன?

ஒரு நிகழ்வை கவனித்தல், அதுகுறித்த கோட்பாடு, பரிசோதனை, சோதனை முடிவுகளில் இருந்து அனுமானம் [Observation, Theory, Experiment & Conclusion] என்ற வரிசைக் கிராமமாக அணுகுவது விஞ்ஞான முறையாகும்.  

முதலில் Observation:  முதலில் கல்லும் மண்ணும் தான் இருந்தது, அதிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உயிர்கள் தோன்றின.  இதற்க்கு ஏதாவது சான்றாக உள்ளதா என நாம்  தற்போது வாழும் உலகைப் பார்க்கவேண்டும்.  எங்காவது பாதி மனிதனாகவும், பாதி குரங்காகவும் வாழும் உயிரினத்தைப் பார்த்திருக்கிறோமா?  பாதி தவளை-பாதி மீன்?  பாதி பறவை-பாதி ஊர்ந்து செல்லும் இனம்?   இந்த மாதிரியெல்லாம் இடைப்பட்ட உயிரினம் என்று எதுவும் இல்லை!!  எந்த உயிரினத்தை எடுத்தாலும் முற்றிலும் பூரண வளர்ச்சியடைந்த உயிர்களாக உள்ளனவே தவிர பாதி வளர்ச்சியடைந்த உயிரினங்கள் என்று எதுவும் இல்லை.

அப்படியானால் பரிணாமம் எப்போது நிகழ்ந்திருக்க வேண்டும்?  முன்னொருகாலத்தில்!!  அப்போ அதற்க்கு ஆதாரம் என்ன?  கற்படிவம் எனப்படும் Fossils.   பல்லாயிரம்/மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் உடல்கள்   Fossil களாக பூமிக்கடியில் பாதுக்காக்கப் பட்டுள்ளன.  இதைக் குறித்த படிப்பிற்கு பெயர் Paleontology எனப்படும்.

உலகில் இவ்வகையான கற்ப்படிவங்கள் [Fossils] 20 கோடி சேகரிக்கப் பட்டுள்ளன.  இவற்றில் பாக்டீரியாக்கள், புழுக்கள், பூக்கள் எல்லாமும் அடங்கும்.

10 கோடி முதுகெலும்பற்ற உயிரினங்கள். நத்தை, நட்சத்திர மீன் போன்றவை.

10 லட்சம் பூச்சியினங்கள்.
5 லட்சம் மீன்கள்

2 லட்சம் பறவைகள்.
1 லட்சம் டைனசோர்கள்

4000 திமிங்கலம்.
1000 வவ்வால்கள்.

இந்த எண்ணிக்கைகளில் சேகரிக்கப் பட்ட இத்தனை கற்படிவங்களை ஆராய்ந்த பின்னரும் கிடைத்த முடிவுகள் ஒன்று கூட பரிணாமத்துக்கு ஆதரவாக இல்லை.  எந்த உயிரினத்தை எடுத்தாலும் அவை முழுமையாக வளர்ச்சியடைந்த வடிவமைப்பையே  பெற்றுள்ளன, இரண்டுங் கெட்டான் நிலையில் [Intermediary] எந்த கற்படிவமும் இல்லை. மீன், குரங்கு, மனிதன் போன்ற இன்றைக்கு இருக்கும் உயிரினமாயினும், டைனோசர் போன்ற பூமியில் மறைந்த உயிரினமாயினும் முழு வளர்ச்சியடைந்த நிலையிலான படிவங்களே உள்ளன, அவை எவற்றுக்கும் முன்னோர் இருந்ததாகவோ அல்லது  ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறியதாகவோ எந்த Fossil ஆதாரமும் இல்லை.   மேலும், அவை ஒரு காலகட்டத்தில் திடீரெனத் தோன்றுகின்றன, திடீரென மறைகின்றவே தவிர ஒருபோதும் பாதி பரிணாமம் அடைந்த நிலையில் ஒரு படிவம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

எதை வச்சு டார்வின் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் எனச் சொன்னார்? இதுக்கு அவர் பெரிய ஆராய்ச்சிகள் எதையும் செய்திருக்கவில்லை. மனிதனையும், மனிதக் குரங்கையும் பார்த்தார் தோற்றம் கிட்டத் தட்ட மனிதளைப் போலவே ஒரே மாதிரியாக இருந்ததால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என அடிச்சு விட்டார்.  மேலும், இதைப் போல ஒரு உயிரினம் இன்னொன்றாக பரிணாமம் அடைந்தது என்பதில் பெரிய லாஜிக்கல் ஓட்டை உள்ளது.   உதாரணத்திற்க்கு, மனிதக் குரங்கு மனிதனாக மாறியதை எடுத்துக் கொள்வோம்.

Ape [ஆரம்பம் குரங்கு] ------  Ape-Man [மனிதனுக்கும், குரங்குக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள உயிரினம்] ------------- Man [இறுதியாக மனிதன்].

டார்வின் ஏன் பரிணாம வளர்ச்சி யடைகிறது என்பதற்கு Survival of the Fittest என்ற ஒரு விளக்கத்தைச் சொன்னார்.  அதாவது கால சூழ்நிலைகளில் ஏற்ப்படும் மாற்றத்தை  தாங்கி நிற்கும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் உயிரினம் மட்டுமே வாழும்.  அப்படிப் பார்த்தால் மேலே Ape  என்ற இனம் Ape -man என்ற நிலைக்கு மாறக் காரணமே, மாறிவரும் சூழ்நிலை மாற்றத்தை தாங்கிக் கொள்ள Ape வடிவம் லாயக்கற்றது, அதனால்தானே?!  அப்படியானால் Ape -man என்ற இரண்டுங் கெட்டன் நிலை Ape ஐ விடச் சிறந்ததாகவே இருக்க வேண்டும்.  ஆனால் இன்றைக்கு வாழத் தகுதி குறைந்த Ape இருக்கிறது, முழுமையாக மாறிய மனிதனும் இருக்கிறான், ஆனால்  Ape ஐ விட அதிக வாழும் தகுதி படைத்த Ape -Man மட்டும் ஏன் இல்லை??!!  என்ன கொடுமை டார்வின் இது?

இப்படியெல்லாம் கிடுக்கிப் பிடி போட்டு கேள்வி கேட்டதும், பரிணாமவாதிகள் உட்கார்ந்து ரூம்போட்டு யோசித்தனர்.  நல்லா கவனிங்க, இவனுங்க எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இன்னமும் செய்யவில்லை, கதை எப்படி கட்டுவது என்று தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!!   ஒரு வழியா முடிவு பண்ணி, இன்னொரு கப்சாவை அவிழ்த்து விட்டனர்.  குரங்கு மனிதனாக ஆகவில்லை, குரங்கும், மனிதனும் ஒரே பொது முன்னோரில் இருந்து தோன்றினர் என்று தோசையை திருப்பிப் போட்டனர்!!  அது யாரப்பா இருவருக்கும் பொதுவான முன்னோர் உயிரினம் எனக்கேட்டால், "அதான் அழிந்து போன இனத்தில ஒன்னு" என்றனர்.  அதற்க்கும் எந்த ஆதாரமும் எதிலும் கிடையாது!! 

மேலும் கிடைத்த கற்படிவங்களில் தோன்றும் வடிவங்கள், கொசு, தலை பிரட்டை தவளை என எதைஎடுத்தாலும்  இன்றைக்கு அவை எவ்வாறு உள்ளனவோ அதே மாதிரிதான் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும்  இருக்கின்றனவே அன்றி பரிணாமம் அடைந்து மாறுபட்டதாக இல்லை. 
ஆக மொத்தத்தில்,  எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த கற்படிவங்களை பார்த்தாலும் அவற்றுக்கு முன்னோர்கள் இவைதான் என்பது போல எவையும் இதுவரை இல்லை, எனவே எந்த உயிரினமும் படிப்படியாக பரிணாமம் அடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, அதற்குப் பின்னரும் இன்று வரை எந்த மாற்றமும் அடைந்ததாகவும் சான்றுகள் இல்லை.   பரிணாமம் நிகழ்ந்தது என நிரூபிக்க இவையிரண்டும் முக்கியம், ஆனால் எந்த சான்றுகளும் இவற்றுக்கு ஆதரவாக இல்லை.

ஆனாலும் பரிணாம வாதிகள் அசரவில்லை.  ஒவ்வொரு பித்தலாட்டமாக அரங்கேற்ற ஆரம்பித்தனர்.  அதிலில் முதலில் வருவதுதான் பாதி குரங்கு, பாதி மனிதன் மண்டையோடு கதை.  [The Piltdown Man Hoax சுட்டி]  1912 ஆண்டு ஹிண்டன் மற்றும் சார்லஸ் டாசன் என்று இரண்டு பேர் இங்கிலாந்தில் பில்ட்டவுன் என்னுமிடத்தில் 5 லட்சம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மண்டையோட்டு படிவம் கிடைத்ததாகவும் அதன் தாடை குரங்கைப் போலவும், கடைவாய்ப் பற்கள், மண்டையோடு மனிதனைப் போல இருப்பதாகவும் கதைகட்டி நம்பவைத்தனர்.   இது குரங்குக்கும் மனிதனுக்கும் சேர்த்த பொதுவான மூதாதையர் இனம் என்றும், பரிணாமம் நடந்தது என்பதற்கான சான்று என்றும் கூறி, இப்படிவம் உலகின் பல முன்னணி அருங்காட்சியகங்களில் வைக்கப் பட்டது.   இதைப் பார்வையிட்ட பெரிய பெரிய விஞ்ஞானிகள் கண்களுக்கும் எதுவும் தவறாகப் புலப்படவில்லை, கோடிக் கணக்கான அப்பாவி மக்களும் உண்மை என்றே நம்பினார்.  அடுத்த 40 ஆண்டுகளில் கிட்டத் தட்ட 500 Ph.D ஆய்வுக்கட்டுரைகள் இதை வைத்தே கயிறு திரிக்கப் பட்டன.  இறுதியாக பிரிட்டிஷ் அருங் காட்சியகம் ஒன்றில் இப்படிவம் வைக்கப் பட்டது.  1949 ஆண்டு, கென்னத் ஓக்லி என்ற படிவ ஆய்வாளர், படிவங்களின் வயதைக் கண்டுபிடிக்கும் ஃபுளோரைடு பரிசோதனை என்னும் புதிய முறையை உருவாக்கியிருந்தார், அவர் தனது முறையை இதற்க்கு பயன்படுத்த எண்ணி இப்படிவத்தை ஆராய்ந்த போதுதான் இது போலி என்று தெரிய வந்தது.  இதன் தாடை சமீபத்திய உராங்குட்டான் குரங்கினுடையது என்றும், மண்டையோடு சில நூறு வருடங்களுக்கு முன்னர் வந்த மனிதனுடையதே என்றும் தெரியவந்ததது.  மேலும், இதன் தாடையை ரம்பம் போட்டு அறுத்த கோடுகள் கூட தெரிந்தது. இரண்டையும் ஒட்டி இத்தனை வருடங்களும் ஏமாற்றி இருக்கிறார்கள் அந்தப் புண்ணியவான்கள். [Popular Science சுட்டி]




 இவர்கள் செய்த அடுத்த பித்தலாட்டம், ஆப்பிரிக்க காங்கோ காடுகளில் பிள்ளைகுட்டிகளுடன் வாழ்ந்த ஒடா பெங்கா [OTA BENGA] என்ற ஒரு மனிதனை பிடித்து வற்புறுத்தி கை கால்களுக்கு விலங்கிட்டு கூண்டில்  ஒரு மிருகத்தை அடைப்பது போல அடைத்து அமரிக்காவுக்குக் கொண்டு சென்று பல வருடங்கள் Zoo வில் மற்ற மிருகங்களைப் போலவே வைத்து கொடுமைப் படுத்தியதாகும்.  அங்கே ஒரு உறங்குட்டான் குரங்கை தன்னோடு வைத்துக் கொண்டு வருபவர்களுக்கு போஸ் குடுக்க வேண்டுமென்று துன்புறுத்தப் பட்டிருக்கிறார்.  பின்னர் அவர் விடுவிக்கப் பட்டாலும் தனது கூட்டத்தோடு சேர்க்கப் படமாட்டார் என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.  [சுட்டி]   தாங்கள் எடுத்துக் கொண்ட போலிக் கொள்கையை உண்மையாக்க எல்லா அயோக்கியத் தனகளையும் செய்யத் துணிந்தவர்கள் இந்த பரிணாம வாதிகள் எனபதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

 



 

 இதற்க்கடுத்தார் போல வருவது பித்தாலாடத்துக்கே பெயர் பெற்ற நம்ம சீனாக் காரனுங்க செய்த வேலை.  இவனுங்க ஒரு டைனோசரின் படிவத்தை எடுத்து அதை பறவை போல செய்து பார்த்துக்கோங்க டைனோசர்தான்  பறவைகளாக மாறியது என்று ஏமாற்றினார்.  இந்தப் படிவம் ஆராயப் பட்டு போலி என்று  அறிவிக்கப் பட்டது.  ஆனாலும், இதற்க்கு செவிசாய்க்காத நேஷனல் ஜியோகிராபிக் சேனல் இதை உண்மை என்றே ஒளிபரப்பியது.


 


 


அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலத்தில் இன்னொரு கொள்கையும் வலம் வந்து கொண்டிருந்தது.  உறுப்பை பயன்படுத்தும் விதத்தில் அது எவ்வாறு பரிணாமம் அடையும் என்பது குறித்த கொள்கை இது.   உதாரணத்திற்க்கு ஒட்டகச் சிவிங்கி, அது மான் மாதிரி ஒரு இனம், அதன் கழுத்து முதலில் குட்டையாத்தான் இருந்துச்சு.  இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கீழே இருந்த இலைகள் தீர்ந்து போச்சு, அதனால மரத்தின் மேலேயுள்ள இலைகளைப் பறிக்க எம்பி எம்பி கழுத்து நீண்டு பல தலைமுறைகளுக்குப் பின்னர் இப்போது உள்ள நிலையை அடைந்தன என்று ஒரு கதையுண்டு.  இது ஒரு உறுப்பை அதிகமாக உபயோகிப்பதால் வந்த வினை.  ஆனால், இது உண்மையா?  ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து மிகவும் நீளம், அவ்வளவு உயரத்துக்கு இரத்தத்தை ஏற்றுவதற்கு இதயம் அதீத அழுத்தத்தை செலுத்தும்.  [280/180mm Hg].  ஆனால் அது தண்ணீர் குடிக்க குனிய வேண்டியிருக்கும்.  அப்போது இதே அழுத்தத்தோடு இரத்தம் போனால் இரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதறிவிடும்.  அப்போது குறைந்த அழுத்தமே இருக்க வேண்டும், இதை இரத்தக் குழாய்கள் விரிவடைதல், இரத்தம் தலைக்குச் செல்லாமல் திசை திருப்புதல் போன்ற அமைப்புகள் மூலம் சரி செய்யப் படுகிறது. குனிந்திருக்கும் தலை மேலே எழும்பும் பொது அதே குறைந்த அழுத்தம் இருக்குமானால் மயக்கம் போட்டு விழுந்து சாக வேண்டி வரும், அப்போது இரத்தத்தை தடுத்த அதே தகவமைப்பு இரத்தத்தை வழங்கி காக்கிறது.  இந்த மாதிரி ஒரு தகவமைப்பு குட்டையாக உள்ள மான்கள் போன்ற என்ற ஒரு உயிரினத்துக்கும் இல்லை.  அப்புறம் எப்படி ஒட்டகச் சிவிங்கிக்கு மட்டும் அது வந்தது?  ஒரு வேலை கழுத்து நீளும் பரிணாமம் நிகழும்  போது அத்தகவமைப்பு இல்லாமல் இருந்து, பின்னர் உருவாக வேண்டுமென்றால் உருவாகும் காலம் வரை அது கீழே குனியவே முடியாதே?!!   தண்ணீரே குடிக்காமல் செத்திருக்குமே?





அதே மாதிரி ஒரு உறுப்பை உபயோகப் படுத்தாவிட்டாலும் அது வீக் ஆகி காலப் போக்கில் காணாமல் போய்விடும்.  இதற்க்கு உதராணமாக அவர்கள் காட்டுவது மனிதனுக்கு உள்ள குடல் வால்!! முதலில் மனிதனும் வாலோடதான் சுத்திகிட்டு இருந்தான், அப்புறம் காலப் போக்கில் அவன் அதை சரியாப் பயன்படுத்தவில்லை, அதனால் அது அது காணமல் போய் உடம்புக்குள் இன்றைக்கு இருக்கும் குடல்வாலாக மாறிவிட்டது என்றும் கதை  சொல்கிறார்கள்.  [ நாங்க சொல்லுவோம், நீங்க தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்ட மட்டும்தான் வேண்டும்!! அதற்கும் படிவம், அது இதுன்னு ஆதாரமெல்லாம் கேட்கப் படாது!! ஆதாரம் கேட்க இதென்ன அறிவியலா?].

அதுசரி, முதலில் வால் வரவேண்டியதற்க்கான அவசியம் என்ன என்று ஒரு கேள்வி எழுகிறது.  ஏதோ தேவை இருப்பதால் தானே வால் பரிணாமத்தில் [அவங்க கணக்குப் படி] உருவானது, பின்னர் அது எப்படி தேவையில்லாமல் போகும்?  உண்மையில் குடல்வால் பச்சைக் காய்கறிகள் பழங்களை செரிப்பதில் உடலுக்கு உதவி புரிகிறது, இப்போது நாம் அவற்றை அவ்வளவாக உண்ணாததால் அது பயனற்றது, நீக்கினாலும் பிரச்சினையில்லை என நினைத்தார்கள். உண்மையில் குடல்வால் நீக்கப் படுபவர்கள் பல உடல்நலக் கோளாறுக்கு ஆளாவது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  எனவே உடலுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பயன் இருக்கிறது ஆனால் நமக்கு அது தெரியவில்லை. அவ்வாறு தெரியாமல் போவதால் அது தேவையே இல்லாதது என்று அர்த்தமாகாது.


மேலே சொன்ன, இது மாதிரியான உதாரணங்களில் பெரிய ஓட்டை இருக்கிறது.  இனபெருக்க செல்களில் உள்ள ஜீன்கள் தான் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்தும் வேலையைச் செய்கின்றன.  ஆனால், அவற்றில் உங்கள் உடல் உறுப்புகளை எதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் எதை குறைவாகப் பயன்படுத்துகிறீர்கள் என்ற விவரம் பதியப் படுவதில்லை, எனவே அத்தகவல்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப் பட வாய்ப்பேயில்லை.  டார்வினும் உபயோகம் குறைந்த உடலுறுப்பு அந்த உயிரினத்திடம் இருந்து காலப் போக்கில் காணமல் போய்விடும் என்ற சிந்தனையைத்தான் கொண்டிருந்தார்.  ஆனால் இது ஜெனட்டிகலாக சாத்தியமே இல்லை.  உதாரணத்திற்கு நடிகை ஸ்ரீதேவி ஜப்பானுக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து மூக்கை வெட்டியிருக்கலாம், ஆனாலும் அவருடைய மகள் 16 வயதினிலே ஸ்ரீதேவியை அச்சில் வார்த்த  மாதிரியே தான் பிறந்துள்ளார்.

பெரிய மூக்கு வச்சிருந்த ஸ்ரீதேவி...........


ஜப்பானுக்குப் போயி ஆபரே ஷன் பண்ணிய விஷயம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படவில்லை.







அவங்க பொண்ணு எங்கம்மா மூக்கு இப்படித்தான் இருந்துச்சுன்னு நிரூபிச்சுட்டாங்க!!   இது எப்படி இருக்கு!!

ஒரு உடலுறுப்பு பயன்படுத்தப் படவில்லை என்பது அடுத்த தலைமுறையை எந்தவிதத்திலும் பாதிப்பதேயில்லை.  இதை நிரூபிக்க, 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் ஆகஸ்ட் வைஸ்மன் August Weismann என்ற விஞ்ஞானி, வெள்ளை எலிகள் மீது சில பரிசோதனைகளைச் செய்தார்.  ஏனெனில் இவற்றின் இனப்பெருக்க வேகம் அதிகம், ஆகையால் குறுகிய காலத்திலேயே பல தலைமுறைகளைக் காணமுடியும்.  வெள்ளை  எலிகளைப் பிடித்து கிட்டத்தட்ட 20 தலைமுறைகளுக்கு அவற்றின் வால்களை வெட்டித் தள்ளினார்.  ஆனாலும், இவ்வாறு உருவான எலிகளில் வால் இல்லாமலோ அல்லது சிறிய வாலுடனோ ஒரு எலி கூட பிறக்கவில்லை.  முதல் தலைமுறை எலிகளைப் போலவே நீண்ட வாலுடனேயே அனைத்தும் பிறந்தன!!  எனவே உறுப்புகளை பயன்படுத்தாமல் விடுவது/மூலி செய்வது [mutation] பின்வரும் தலைமுறைகளில் உறுப்புகளை இழக்கச் செய்யும் என்ற கொள்கை தோற்கடிக்கப் பட்டது.  உடலில் உள்ள செல்களில் ஏற்ப்படும் மாற்றம் பற்றிய தகவல் இனப்பெருக்க செல்களில் உள்ள DNA வை எவ்விதத்திலும் பாதிக்காது, எனவே அடுத்த தலைமுறைக்கு அத்தகவல் கடத்தப் படாது!!  எனவே இந்த முறையில் எந்த பரிணாமமும் நடக்காது.

அதை அடுத்து Survival of the Fittest [வலியவனே வாழ்வான்] என்ற ஒரு கொள்கையை தனது பரிணாமத்திற்கு ஆதரவாக டார்வின் கொண்டுவந்தார்.  பெண்ணினத்துடன் யார் இணைவது என்பதை மான் முதல், சிங்கம், புலி, காண்டாமிருகம், யானை வரை, சண்டையிட்டு யார் ஜெயிகிறார்கள் என்பதை வைத்தே அவை தீர்மானிக்கின்றன.  இதை பல இயற்கைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த முறையில் பரிணாமம் நடக்குமா?  ஒரு புதிய இனம் உருவாகுமா?  நடக்காது.  ரெண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானைக்கு அடித்துக் கொண்டாலும் இறுதியில் ஜெயிக்கப் போவது ஒரு யானைதானே!!  எனவே பிறக்கப் போகும் குட்டி சிறந்த குணங்களுடன் இருக்கலாம் ஆனால் அதுவே பரிணாமம் ஆகி புதுசா வேற ஒரு ஜீவன் உருவாகாது!!

ஒருவகை உயிரினத்தில் சைசில் சிறியது பெரியதாக இருந்தாலும் இனம் அதே இனம்தான், அதை பரிணாமம் என்று சொல்ல முடியாது.


இராண்டாம் பாகம் தொடரும்.......

இப்படிக்கு
சாதிக் கட்டமீரான்

 

Sunday, June 23, 2013

20. என் வீட்டு சிட்டுக்குருவிகள் எங்கேபோயின!



எங்க வீட்டு சிட்டுக்குருவிகளைப் பத்தி பேசணும்னு நான் நினைச்சு, நினைச்சு தள்ளிப் போட்ட விசயத்தைப் எழுத உட்காருவதற்கான நேரம் இன்னக்கி காலையிலதான் அமைஞ்சிருக்கு. நான் பிறக்கும் முன்பே காலகாலமாய் எங்க வீட்டு கூரைலே கூடு கட்டி வாழ்ந்த குருவிகள் எங்கேபோயின? என் வீட்டு கொய்யா மரம் எனக்கு மட்டும் விளையாடும் இடமல்ல! என் குருவிகளுக்கும் தான்!  எனக்கு விபரம் தெரியும் போது, எனக்கு ஒரு வாயும், குருவிக்கு ஒரு வாயும், சோறூட்டி வளர்த்த எங்க நனத்தா,  காலத்தில் கரைந்து போனது போல் இக்குருவிகளும் காலத்தில் மறைந்து போயினவோ அல்லது  மாயின்ந்து  போயினவோ?

முன்பெல்லாம் கிராமத்து வீடுகளெங்கும் காணக்கிடைக்ககூடிய ஒரு விடயம், அடைக்கலங்குருவிக்கூடு...கூரை வீடு,பனைவாரை அடித்த ஓட்டு வீடு,செங்கல் சுவர் மச்சு வீடு என்று எந்த வீடாக இருந்தாலும் மேக்கால ரூம், கிழக்கால ரூம் என்று எல்லாவிடங்களிலும் வாகான இடமாய்ப்பார்த்து கூடுகட்டியிருக்கும்...

அது கூடுகட்டும் அழகே தனி...காய்ந்த புல்,சின்ன வைக்கோல், ஏதோ ஒரு செடியின் காய்ந்த சருகு, கொஞ்சம் இறுக்கமான சின்ன குச்சி என்று எதாவது ஒன்றை அலகில் வைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் குறையும் நேரம் பார்த்து முற்றத்தின் இரும்பு கம்பியிலோ, சுவர் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்பமரத்து மூன்றாவது கிளையிலோ சுறுசுறுப்பாக தலையை ஆட்டி ஆட்டி சின்னக்கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும்...

பாட்டி வெற்றிலைப்பாக்கு இடிக்கும் சத்தமோ, மோர் சிலுப்பும் சத்தமோ, வியர்வையோடு தாத்தா வந்தமரும் சத்தமோ, ஜெனரேட்டர் இஞ்சின் ஓடும் சத்தமோ, ட்ராக்டர் ட்ரெய்லர் மாட்டும் சத்தமோ அதை தொந்தரவு செயததாக நினைவில்லை...தான் உண்டு தன் வேலை உண்டு என்று கருமமே கண்ணாக கூண்டு கட்டுவது, தான் என்ன வேலை செய்கிறோம் என்று இந்த மனிதனுக்கு தெரியுமோ தெரியாதோ என்பது பற்றி கவலை இன்றி கூட்டின் வாசலிலோ, உள்ளோ அமர்ந்திருப்பது...

முட்டை போட்டு குஞ்சு வைத்து, அந்த குஞ்சுகளுக்கு எங்கிருந்தோ பிடித்துவந்த புழுவோ, பூச்சியோ, கீச்ச் கீச்ச் சப்தங்களுக்கு மத்தியில் ஊட்டி, வெளியே கோழிகளுக்கு போட்டிருக்கும் கம்போ கேவுறோ தனக்கொன்று பொறுக்கிக்கொண்டு உத்திரத்தில் சத்தமிட்டுக்கொண்டோ, சில நேரங்களில் சத்தமில்லாமலோ உட்கார்ந்திருக்கும்...


இத்தனை வருஷமா இதே இடத்தில் பார்க்கிறேனே, இதுக எத்தனை தலைமுறையா இருக்கும்? அப்படி தலைமுறை தலைமுறையா வந்தா, இதுக எத்தனை வருஷம் வாழுது? எத்தனை முறை வருஷத்தில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிது? எப்படி பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே அதுகளோட குஞ்சுகள் மிகச் சரியா அதே கூரையை கண்டுபிடிச்சு வந்து குடும்பம் நடத்துது? அப்படி இப்படின்னு பெரும்பாலும் நான் மொக்கையா இருக்கும் பொழுது இது போன்ற கேள்விகள் மண்டைக்குள்ளர குடைஞ்சதுனாலே இங்க பதிவா கொண்டு வர அளவிற்கு ஆயிப்போச்சு.


சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் நீக்க மற மனித குடியேற்றம் எங்கெல்லாம் அரங்கேறியதோ அங்கெல்லாம் நோக்கத்தோடோ அல்லது திட்டமிடாமலோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் வாழும் இடத்தில் இது போன்று நகரங்களையொட்டி தட்பவெப்பம் கொஞ்சம் இதமாக இருக்கும் பொழுது மனித வாழ்விடங்களை சார்ந்து வாழ்வதாக அமைத்துக் கொண்டும், குளிர்காலத்தில் கிராமங்களை ஒத்த இடங்களுக்கும் குடி பெயர்ந்து விடுவதாக தெரிகிறது.

இந்த சிட்டுக்குருவிகள் இனம் வந்து பனை மரத்தில கூடு கட்டி வாழுமில்ல முடைவான் குருவி (the weaver bird) அத்தோட இனம்தானாம்.

இந்த புகைப்படத்தில நீங்க பார்க்கிறது ஒரு ஆண் குருவி. ஆண்/பெண் என அடையாளப் படுத்தி பார்க்கிறது ரொம்பச் சுலபம். ஆண் குருவி நல்லா வண்ணமயமா இருக்கும், செங்கல் நிறம் மற்றும் கருமை நிறக் கோடுகள் அதன் இறக்கையின் மீதும், அலகிற்கு பக்கத்தில் கருமையான ஒரு திட்டும், அலகிற்கு மேலே முன் மண்டையின் மீது சாம்பல் நிறமாகவும் இருக்கும். பெண் குருவிகள் நிறம் குறைச்சலாவும், சாம்பல் நிறத்திலும் இருந்து போகும். இதோட ஆரோக்கியம் அதன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் அந்த கருமையான திட்டைக் கொண்டும் அறியலாமாம். நல்லா அடர்த்தியா இருந்தா, ஆரோக்கியமாக இருப்பதாகவும், இனவிருத்தி செஞ்சிட்டும் இருக்காருன்னும் தெரிஞ்சிக்கோங்க.

அதோட அலகு இந்த நாட்டில குளிர்காலத்தில கருமை நிறமாகவும், மிதமான வெப்ப காலங்கள்ல மஞ்சளாவோ அல்லது பிரவுன் நிறத்திலோ இருக்கும்.




வருஷத்திற்கு ரெண்டு, மூணு முறை முட்டையிடும் போல, ஒவ்வொரு முறையும் 2-5 முட்டை வரைக்கும் இட்டு 14-16 நாட்கள் அடைகாக்குதாம். இது பொதுவா ஏப்ரல்-ஆகஸ்ட் மாதம் வரைக்கும் நடை பெறுவதாக தெரிகிறது. கட்டற்ற சுதந்திரத்தோட சுத்தித் திரியற சிட்டுக்குருவிகள் குறைந்தது ஐந்து வருடங்கள் வாழ்வதாகவும், கூண்டில அடைச்சு வாழ வைச்சிப் பார்த்ததில பத்து வருஷம் வரைக்கும் கூட நீட்டிச்சதா சொல்லிக்கிறாங்க. ஆனா, என்னயப் பொருத்த மட்டில அதில உடன்பாடு இல்ல, எத்தனை வருஷம் மூச்சு விட்டுக்கிட்டு திரிஞ்சோங்கிறது முக்கியமில்ல; எத்தனை மணி நேரம் வாழ்ந்தோங்கிறதிலதான் விசயம் இருக்கின்னு நினைக்கிற ஆளு நான். அதுனாலே அதோட வன வாழ்க்கை ஐந்து வருஷமே இனிப்பா இருக்கும் அதுகளுக்கும்;எனக்குமின்னு தெரியுது.
 

 

இன்றைக்கு அடைக்கலங்குருவிகள் இல்லை...

ஆமாம்...அழிக்கப்பட்டுவிட்டன...தானாக அல்ல...அழித்தொழிக்கப்பட்டுவிட்டன...

ஆச்சர்யமாக இருக்கிறதா என்ன ? ஆமாம். அதுதான் உண்மை.

செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மை சிட்டுக்குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//

இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம் அவைகளை சென்றடைய வைப்பதற்கான நுண்ணலை டவர்கள்; அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...

சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்ச்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?

எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது. 

யானைகளில் (அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன் செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.

அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.

பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

நீங்கள் கடைசியாக அடைக்கலங்குருவியை எப்போது பார்த்தீர்கள் ? கிராமமோ, நகரமோ...மனிதர்களை தன்னுடைய தோழர்களாக நினைத்து, அவர்களிடம் அடைக்கலம் தேடிவந்தவை இந்த அடைக்கலங்குருவிகள்..

மனிதன் கட்டும் வீட்டில் நாமும் நமது வீட்டை கட்டிக்கொள்வோம்...அவனால் நமக்கு தீங்கில்லை..நன்மையே..என்று அதன் சின்ன உள்ளத்தால் சிந்தித்து மனிதனிடம் அடைக்கலம் தேடிவந்ததனாலேயே இதன் பெயரை அடைக்கலம் குருவிகள் என்று அழைத்தோம்...

இன்றைக்கு அதே மனிதன் அடைக்கலங்குருவிகளை, வேரோடு, வேரடி மண்ணோடு அழித்தொழிக்கும் பணியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிட்டான்...எப்படி என்று கேட்கிறீர்களா ?

புதிர் வைக்கும் எண்ணம் இல்லை எனக்கு....நான் நெஞ்சார ரசித்து பார்த்த அடைக்கலம் குருவிகளை இனிமேல் பார்ப்பேனா என்ற கேள்வி கத்தி போல் இதயத்தை ஊடுருவித்தாக்குகிறது...

ஆம்...அடைக்கலம் குருவிகள் ஆண்மையிழந்துவிட்டன...இனி உங்கள் வீட்டில் அடைக்கலம் குருவி கூடுகட்ட வாய்ப்பில்லை...முட்டையிடவோ குஞ்சு பொரிக்கவோ வாய்ப்பில்லை...

இயற்கை உரங்களை விடுத்து அதிக மகசூலுக்காக செயற்கை உரங்களை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தது சரிதான்...ஆனால் இப்போது உரங்கள் இட்டும் அதன் மேலே அமர்ந்து பயிர்களை நாசம் செய்யக்கூடியதாக பூச்சிகள் திடம் பெற்றுவிட்டன...இதனால் தமிழக விவசாயிகள் அதிக வீரியம் உள்ள உரங்களை கடந்த அய்ந்தாண்டுகளாக பயன்படுத்த தொடங்கி, அதன் மூலம் புல், பூண்டு, வைக்கோல் என்று எல்லா தாவரங்களிலும் அதன் பாதிப்பு...இதன் மூலம் பொதுவாக கிராமங்களில் இருக்கும் அடைக்கலம் குருவிகள் இனவிருத்தி செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...



ஆக இனவிருத்தி செய்யமுடியாமல் போன அடைக்கலங்குருவிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து, நகரமயமாக்கலில் அதன் சிறிய உணவு தானிய இருப்பும் விஷமாகிப்போன நிலையில் ஒவ்வொன்றாக அழிந்துவிட்டன. இனி அடைக்கலங்குருவிகளின் பொம்மைகளைத்தான் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கமுடியும் போலும்..

   வீட்டில் மரம் வைக்கும் பழக்கம் இப்போது முற்றிலும் நம்மிடம் மறைந்து விட்டது. இப்போதெல்லாம் பள்ளபட்டியில் வீட்டில் மருந்துக்கு கூட ஒரு மரம் வைப்பது இல்லை! மரம் வைக்கும் இடம் கூட வேஸ்ட்னு, மாடிவீடு கட்டி வாடைகைக்கு விடறோம்.  
  தெற்கு மந்தை  டேன்ங்கோரம்  இந்த கட்டுரையை எழுதும்போது கீச் கீச் என்று எங்கோ ஒரு ஓசை...அது அடைக்கலம் குருவியாக கண்டிப்பாக இருக்கக்கூடும்...இனிவரும் சந்ததிகள் இந்த ஓசையை கேட்கமுடியாமலே கூட போய்விடக்கூடும்...!!! மனது கனமாகிறது...!!!!!!