Do not mix up truth with falsehood and knowingly hide the truth. Holy Qu’ran(2:42)

Sunday, October 6, 2013

36.சினிமா ஏற்படுத்தும் சீர் கேடுகள்.


சினிமா ஏற்படுத்தும் சீர் கேடுகள்.

நிச்சயமாக என் இரட்சகன் மானக்கேடானவற்றில் பகிரங்கமானவற்றையும் மறைவானவற்றையும் பாவத்தையும் உரிமையின்றி வரம்புமீறுவதையும் எவ்வித ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்காமல் இருக்கும் போது அவனுக்கு இணை வைப்பதையும் அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைக் கூறுவதையுமே தடைசெய்துள்ளான் என நபியே நீர் கூறுவீராக.--- திருகுரான்(7:33)

 மனிதன் நாகரீக பண்பாடுகளுடன், ஒழுக்க விழுமி யங்களுடன் வாழ்வதற்கு ஆரோக்கியமான ஒரு சூழல் அவசியம். ஆரோக்கிய வாழ்வுக்கு கேடு விளைவிக்கக் கூடிய சுற்றுச் சூழலை சுத்தப்படுத்து வதுபோல கலாசார பண்பாடுகளை நாசமாக்கக் கூடிய காரியங்களையும் சுத்தப்படுத்தி அப்புறப் படுத்த வேண்டும்.

இன்று நாட்டில் இனவாத கோஷங்களுக்கும், அரசி யல் விவகாரங்களுக்கும் அடுத்ததாக ஆபாச சினி மாக்களை பற்றித்தான் எல்லோரும் விமர்சனம் செய்கிறார்கள். பலத்த கண்டனங்களை தெரிவிக் கிறார்கள்.

வளர்ந்து வரும் இளம் சமூகம் தவறான நடத்தை களுக்கு இட்டுச் செல்வதற்கு வழிகாட்டியாக இந்த ஆபாசப்படங்கள் அமைந்துள்ளன. இத்திரைப் படங் கள் மூலமாக கல்வியை கற்றுக்கொள்ளவோ, கலா சாரத்தை பெற்றுக் கொடுக்கவோ முடியாது. ஆனால், பணம் சம்பாதிக்கும் வழியை பெருக்கிக் கொள்ள முடியும். கீழ்தரமான எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஊக்குவிக்க முடியும். சினிமாவின் மூலம் எந்தவொரு மேதையும் சீர்திருத்த வாதியும் உருவாகி விடுவதில்லை.

பாதையில் பெற்றோர்களும், பிள்ளைகளும், அண்ண னும், தங்கையும் செல்ல முடியாத நிலையில் ஆபாசக் காட்சிகள் சுவரொட்டிகள், கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இளம் பெண்னொருத்தி பஸ்ஸில் அல்லது பாதையில் செல்லும்போது பக்கத்திலுள்ள ஆண்களின் பார்வைகளினால் வெட்கித் தலை குனியக் கூடிய கொடூரமான ஒரு நிலையை இந்த திரைப்படங்கள் தோற்றுத்துள்ளன.

இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வருப வனுக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய தன் மனைவிக் கும் அடுத்தவன் மனைவிக்கும்  வித்தியாசம் தெரியாது. அவனது பார்வையும், சிந்தனையும் கொடூரமான கற்பனைக்கு சென்றுவிடும்.

வெட்கம், மானம், மரியாதை, மனிதனிடமிருந்து அகன்று போகும்போது கீழ்த்தரமான நடவடிக்கை கள்தான் பிரதிபலிக்கும். தனி நபர் பாதிப்பினால் குடும்ப, சமூகவாழ்வு பாதிக்கப்பட்டு சின்னாபின்ன மாகி விடும்.

நாட்டில் நடைபெறக்கூடிய கொலை, கொள்ளை துஷ்பிரயோகம் கற்பழிப்பு மற்றும் வன்முறை களுக்கு இத்திரைப்படங்கள் வழிகாட்டிகளாக உள்ளன என்பதை நாட்டு நடப்புகள் மூலம் அறிகி றோம். இதில் ஆச்சரியமான செய்தி என்னவெனில் மதத்தின் பெயரால் ஆபாசப் படங்கள் வெளி வந்தும்  கூட மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கி றார்கள் என்பது தான்.

‘‘வயது வந்தவர்களுக்கு மட்டும்தான்’’ என்ற முத்தி ரையுடன் வெளிவரும் படங்கள் வயதெல்லையும் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. ஆபாசப்படங் கள் போலவே ஆபாச சஞ்சிகைகள், புத்தகங்கள் CDகள் சந்தைகளில் வீடியோ கிளப்களில் பகிரங் கமாக விற்பனை செய்யப்படுகின்றன. இணையத் தளங்கள் இயங்குகின்றன. இவைகளுக்கெதிரான கண்டனங்கள் எழுந்தாலும் அரசாங்கம் ஆக்க பூர்வமான சட்ட நடவடிக்கைகள் எடுத்தாக தெரியவில்லை. அரசுக்கெதிராக செய்திகள் வெளி வருமாயின் அப்போது மீடியாக்களுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்து முடக்கிவிடுகின்றது.

எல்லோரும் ஆபாச படங்களை தடை செய்வதில் தான் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆபாசப் படங்கள் ஆபாசம் இல்லாத படங்கள் என இரு வகையாக பிரித்து தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். எனவே இவர்களது பார்வையில் ஆங்கிலத்திலும் மளையாளத்திலும் சிங்களத்திலும் வெளிவரும் ஆபாசப் படங்கள் (A டைடில் படங்கள்) தான் சமூ கத்தை சீரழிக்கிறது. ஆபாசம் இல்லாத (A டைடில் என்று முத்திரை குத்தாத தமிழ், சிங்கள, ஹிந்தி) படங்கள் அத்தகைய சீரழிவை தரவில்லை என்பது வாதமாகும்.

சினிமாவை பொறுத்தவரை பெண்களை ஆபாசப் பண்டங்களாக காட்சிப் பொருட்களாக சித்தரிக் கிறார்கள். அரைகுறை ஆடையுடன் வளம் வருவதும், நடன மாடுவதும் பெண்ணின் பிரதான பாத்திரமாகும். எந்தளவு குறைந்த ஆடையுடன் மேனியினை காண்பிக்க முன்வருகிறாளோ அவளுக்குத் தான் கதாநாயகி பாத்திரம் வழங்கப்படும் எப்பெண் உதடுடன் உதட்டை அழுத்தி முத்தமிட்டு தாராள தன்மையுடன் நடிக்க வருகிறாளோ அவளுக்கு கால்ஷீட் அதிகம்.

இடையழகும் தொடையழகும் தொப்புள் அழகும் அதிகம் காண்பிக்கும் பெண்ணுக்குத்தான் மவுசு அதிகம்.

ஓட்டுமேனியுடன் தொட்டுக் கொள்ளும் ஆடையு டன் ஆடிப்பாடி நடனமாடுகிறாளோ அவளுக்குத் தான் கனவுக் கண்ணி என்ற பட்டம்.

இரட்டை வசனங்களின்  பாடல்கள் மற்றும் நகைச் சுவைகள் சேர்ந்த பாத்திரத்துடன் குடும்ப, சமூக கதைகளையும் கொஞ்சம் கூறி சேர்த்து ‘‘இது ஒரு குடும்பப் படம்’’ என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள்.

சில சமயம் பெற்றோர்கள் தொலைக் காட்சியில் சினிமா காட்சிகளை பிள்ளைகளுடன் உட்கார்ந்து பார்க்க முடியாமல் முகம் சுளிக்கிறார்கள். ‘‘அப்படி யான காட்சிகள்'' வரும்போது உடனே எழுந்து சென்று விடுகிறார்கள். அல்லது நிறுத்தி விடு கிறார்கள். இல்லையேல் தனிமையில் பார்க்க விரும்புகிறார்கள். இந்த அவஸ்தைகள் ‘‘குடும்பப் படங்கள்’’ என்று சொல்லக்கூடிய படங்களில்தான் வருகின்றன. குடும்பப் படத்தை பொறுத்தவரை ஆணும் பெண்ணும் முழு ஆபாசத்தில் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் வருகிறார்கள். மற்ற (A டைடில்) படத்தை பொறுத்தவரை முழுமையான ஆபாசத்தில் வருகிறார்கள். ஆபாசத்தைப் பொறுத்த வரை இரண்டும் ஒரே வகையைச் சார்ந்தது என்பதை அறிவுடையோர் ஏற்றுக் கொள்வார்கள்.

சினிமாவின் மூலம் மனிதனுக்கு நற்பண்புகளை யோ, நாகரீகத்தையோ கற்றுக் கொடுக்க முடியாது. வன்முறைகளையும், கற்பழிப்புக்களையும், காதல் ஊடல்களையுமே அதிகமாக கற்றுக் கொடுக்கப் படுகிறது. பிள்ளைகளுக்கு கட்டாயப் பாடங்களாக படிப்பிக்கப்படுகின்றன. சினிமா ஒரு பொழுது போக்குச் சாதனம் என்ற பெயரில் அசிங்கங்களை வித விதமாக காட்சிப்படுத்தப்படுகின்றன. தங்களது உடல் பரிமாணங்களை காண்பித்து பணம் சம்பாதி க்கும் இயந்திரம் தான் சினிமா! கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கும் இலகு சாதனம் சினிமா! கதானாயகன் உடலை மறைத்துக் கொள்வான் கதா நாயகி உடலை திறந்துக் கொள்வாள் என்பது தான் இத்தொழிற்சாலையில் முக்கிய விதி.

மக்களை மடையர்களாக்கி பணம் சம்பாதிக்க அவர்கள் கையாண்ட வழிமுறைதான் சினிமா! கலை அம்சம் பொருந்திய ஊடகம் என்ற நவரச வார்த்தை.

சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு ஆணும், பல பெண்களை அனுபவிப்பதும், ஒவ்வொரு பெண்ணும் பல ஆண்களை அனுபவிப்பதும்தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை நடிகர் பாண்டியராஜன் இப்படி விளக்கப்படுத்துகிறார் ‘‘கட்டுகட்டா பணம் கொடுத்து மூணு வேளை கறியும் சோறும் போட்டு காரும் பங்களாவும் கொடுத்து அழகான பெண்களை கட்டிப்பிடிக்கச் சொல்கிறது சினிமா. இதற்காக 100 வருஷமானாலும் போராடலாம் என்கிறார் (இதுதான் சினிமா பக்12.)

இதற்குப் பெயர் தான் கலை, கலாசாரத்தை வெளிப் படுத்தும் அரங்கம்.

சினிமாவை ஆதரிப்பவர்கள் வாழ்க்கையில் நடப்ப தைத் தானே சினிமாவில் காட்டுவதாக கூறுகிறார் கள். இவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் தங்களது அந்தரங்கமான வாழ்க்கையை நாலு பேர் பார்க்க பகிரங்கமாக காட்சிப்படுத்த முன்வர வேண்டும். ஏனெனில் இந்த வாழ்க்கையைத் தானே சினிமாவிலும் காட்டுகிறார்கள். அதைத் தானே இவர்களும் இயக்கிப் பார்த்து நியாயம் கூறு கிறார்கள்? இரண்டு பேர் நடித்துக் காட்டுவதை பார்க் கக் கூடிய இவர்கள், இவர்களது அந்தரங்கக் காட்சி களை நாலுபேர் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார் கள். இவர்களது உள்மனம் சினிமாவின் கேடுகெட்ட தனத்தை ஏற்றுக் கொண்டாலும் சமூகத்தை ஏமாற்ற அந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஜாதி வேறுபாடின்றி காதலித்து கரம் பிடிப்பதையோ பெற்றோரை எதிர்த்து ஓடுவதையோ ஆதரிக்க வேண்டும். இதுவும் சினிமாவின் நிஜம் தானே! ஆதரிப்பார்களா இவர்கள்?

சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்கள் தங்களது மனைவிகளையும் இளம் பெண் பிள்ளைகளையும் சினிமாவில் நடிக்க விடாமல் தடுப்பதன் நோக்கத்தை புரிந்து கொண்டால் சினிமாவின் உண்மை நிலை என்ன என்று புரிந்துவிடும்.

தன்னுடைய மனைவியை இன்னுமொருவன் கட்டிப் பிடிக்கக் கூடாது முத்தமிடக்கூடாது என்று ரோஷம் கொள்பவர்கள் அடுத்தவனுடைய பெண்களை கட்டிபிடிப்பதும் முத்தமிடுவதும் சுயநல மின்றி வேறென்ன?

பொதுவாக சினிமாவில் நடிப்பவர்களை  குறிப்பாக கதாநாயகிகளை மணமுடிப்பதை பெற்றோர் விரும்பு வதில்லை. இதற்கு காரணம் ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனை புரிந்து கொள்ள பெரிய ஆய்வோ ஆராய்ச்சியோ தேவையில்லை. சற்றென்று புரிந்து கொள்ள முடியும். சினிமாவில் காட்டுவதை, நடிப்பதை ஏற்றுக் கொள்ள இவர்களது உள்ளங்கள் மறுக்கின்றன. ஆனால் கலை அம்சம் பொருந்திய தெய்வீக் கலாச்சாரமாக பேசுவார்கள்.

இந்த இடத்தில் இவர்கள் வெட்கம் மானம் பற்றி நன்கு புரிந்து கொள்கிறார்கள். அடுத்தவனுடைய பெண் பிள்ளைகளை அனுபவிப்பார்களாம். தம் மனைவியை  எவரும் அணுகக் கூடாதாம். தனக்கு வரும் மருகமள் பத்தினியாக கௌரவமாக  இறுக்க மாக மூடிக்கொள்ளக் கூடியவளாக இருக்க வேண்டு மாம்.

மொத்த சமுதாயமும் சினிமாவில் சீரழிந்து போனா லும்  அந்த சீரழிவு தங்களது மனைவி மக்களுக்கு வரக்கூடாது என்பதே அவர்களது நோக்கம். வாழ்க் கையில் நடப்பதை சினிமாவில் காட்டுகிறார்கள் என்பவர்களின் இரட்டை வேடம் தான் இது.

இதை எல்லாவற்றையும் விட கட்டிலில் கிடந்து இரண்டு பேரும் செய்யும் சில்மிஷங்களைப் பார்த்த பிள்ளை ‘‘அம்மா அந்த அங்கள் அந்த ஆண்டியை என்ன செய்கிறார்’’ என்று கேட்கும் போது தான் சினிமாவின் சிம்பல் பளிச்சென்று தெரிகிறது பெற்றோருக்கு!

இந்த பின்னணியில் ஸ்டார்களும் சூப்பர் ஸ்டார் களும் நட்சத்திரங்களும் மெகா நடிகர்களும் நடிகை களும் வளம் வருகிறார்கள். இவர்களுக்கு வருடத் திற்கு ஒருமுறை சிறந்த நடிப்புக்காக விருதும் -தேசிய விருதும்- வழங்கப்படுகிறது. பல பேருக்கு பல மதத்தவர்களுக்கு இது நாகரீக பண்பாடுகளாகத் தோன்றினாலும்  ஒழுக்க விழுமியங்களை பாது காக்க விரும்பும் இஸ்லாத்திற்கு நாகரீகமாக தென் படவில்லை.

மனித ஒழுக்க விழுமியங்களில் கவனம் செலுத்தும் மார்க்கம் என்ற வகையில் இஸ்லாத்தின் பார்வை யில் இவ்விரு படங்களும் சமூகத்தை சீரழிவுக்கு கொண்டு செல்லும் சாதனமாக கணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண் பெண்ணையும் வெட்கத்தோடும் நாணத்தோடும் கற்போடும் வாழவைக்கும் நில வரத்தைப் பற்றியே இஸ்லாம் பார்க்கிறது. சிறு கீறல் கூட கற்புக்கு வந்து விடக் கூடாது என்று கண்டிப்புடன் அவதானம் செலுத்துகிறது. எனவே மேற்சொன்ன சினிமாவின் இலக்கணத்தை இஸ்லாம் முற்றிலுமாக  நிராகரிக்கிறது.. பொழுது போக்கு என்ற பெயரில் அசிங்கங்கள் அரங்கேற்று வதையும் மக்களின் செல்வங்கள் சுரண்டப்படு வதையும் ஏமாற்றப்படுவதையும் எதிர்க்கின்றது. கொஞ்சம் தெளிவாக கூறுவதானால், ஒரு அன்னிய பெண்ணை ஒரு அன்னிய ஆண் உற்று நோக்கு வதையோ, ரசிப்பதையோ ருசிப்பதையோ (இரு பாலாருக்கும்) இஸ்லாம் தடைசெய்கிறது. ஒரு பெண் தனது அழகையும் அலங்காரத்தையும் தனது கணவனுக்குக் காட்டுவதை அனுமதிக்கிறதே தவிர பிற ஆண்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் செயல் படுவதை கண்டிக்கிறது.

அதன் காரணமாகத்தான் பெண்கள் வெளியில் செல்லும்போது கூட அடுத்தவனுடைய கீழ்தரமான பார்வைக்கு ஆளாகாத வண்ணம் அல்லது அடுத்த வனை சுண்டி இழுக்கும் வண்ணம் அரைகுறை ஆடையுடன் அங்கங்கள் தெரியும் விதத்தில் ஆடை அணிவதை தடுக்கிறது. பெண்கள் அடுத்தவனின் ‘‘கற்பனை பார்வைக்கு’’ இலக்காகுவதை தவிர்க் கவே இந்த உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த இலக்கணம் சினிமாவிலும் இருப்பதானாலேயே அதனை இஸ்லாம் தடைசெய்கிறது.

எனவே முஸ்லிம்கள் கண்டிப்பாக இந்த சீரழிவை விட்டும் தூரமாக வேண்டும் ஆரோக்கியமான இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க சினிமா, தொலைக்காட்சிப்படங்கள் தடைக்கற்களாக உள்ளன என்பதை புரிந்துகொண்டு மஃரிப் வேளையில் குர்ஆன் ஓதி, பிள்ளைகளையும் படிக்க வைத்து சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டும். பெற்றோர்களின் கையில்தான் வெற்றியும் தோல்வியும் உள்ளது.  அல்லாஹ் கூறுகிறான்:

 
 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். திருகுரான்(24:30)

 

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் ----------- (24:31) ; திருகுரான்

 

நன்றி: M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி.
அன்புடன்

சாதிக் கட்டமீரான்
 

 

35) சினிமா.... ! பொறுக்கிகளின் சொர்க்கம் (பாகம் -1)

எங்கே போகிறது தமிழ் சினிமா?

 
சினிமாகாரர்கள் ஒரு ஒழுக்கமானவர்களாகவோ, கற்புள்ளவர்களாகவோ, நல்லவர்களாகவோ, ஏன் ஒரு மனசாச்சியுள்ளவர்களாகவோ  கூட கண்டடிப்பாக இருக்கமுடியாது!
 
Vidhya Balan Latest Stills  - Vidhya Balan Latest Photos  - Picture Gallery   Actress Trisha Beautiful Wallpaper  - Trisha Latest  Stills in Saree  - Picture Gallery  Actress Nayantara Latest  - Picture Gallery
அண்மைக்காலமாக வெளிவருகிற திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றும் இளைஞன் எப்படிச் சித்தரிக்கப்படுகிறான்?

பொழுது விடிந்ததுமே குடிப்பவனாக (சூது கவ்வும்)

கும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்)

வேலை வெட்டி இல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்)

தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு)

இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

பாத்திரங்கள் மட்டுமல்ல, அண்மைக்கால சினிமாக்களின் கதைக் கருக்கள் என்ன?

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு முன்பாக திரைக்கு வந்தது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ செய்திருக்கிறது.

தர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தன என்பது நாடறிந்த செய்தி. கௌரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் சமீபமாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கவலைக்குரிய இந்த விஷயத்தை பகடி செய்து பார்க்கிறது படம்.

வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது காதல் எதுவும் இல்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கௌரவத்துக்காக தன் பெண்ணைக் கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜின் பாத்திரம் அறிமுகப்படுத்தப் படுகிறது. ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை அவர் கௌரவமாகக் கருதுகிறார்.

படத்தில் சத்யராஜ் ஏற்றுள்ள பாத்திரம் என்ன ஜாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் - பழனி வட்டாரக் கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. ஹீரோவின் ஜாதி என்னவாக இருக்கும் என்பதற்கும் க்ளு இருக்கிறது. அவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக - குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.

இப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடா? காதல் திருமணங்கள் குறித்து பிரச்சினை எழுப்பும் சில அரசியல் கட்சி சொல்லிவரும் குற்றச் சாட்டுக்களில் சில...

பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாகப் பார்த்துக் காதலிக்கிறார்கள். பிற்பாடு,பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.

ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.

மைனர் பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்.

இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.

தர்மபுரி காதல் கலவரம் சமீபத்தில் நிகழ்ந்து இன்னமும் ரத்தக்கறை கூட காயாத நிலையில் காதலையும், கௌரவக் கொலைகளையும் பகடியாகப் பார்த்திருக்கிறது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
வேண்டுமென்றேதான் பகடி செய்தேன். காதலுக்கு ஜாதி/வர்க்கத்தால் எதிர்ப்பு, அதன் காரணமாக கௌரவக் கொலை என்பதெல்லாம் படுமோசமான முட்டாள்தனம். அதைப் பகடி செய்து படமெடுத்திருப்பதும், அத்தீமையை எதிர்ப்பதன் ஒரு வடிவம்தான்" என்கிறார், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குநரான பொன்ராம்.

‘சூது கவ்வும்’ படத்தில் ஓர் அரசியல்வாதி நேர்மையாக இருப்பது தவறு என்பதைப் போல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மாட்டிக் கொள்ளாமல் ஆள் கடத்துவது எப்படி என்று இளைஞர்களுக்கு வகுப்பெடுக்கப்படுகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சித்தரிக்கப்பட்ட இளைஞர்களைப் பாருங்கள். பள்ளிப் பெண்ணைக் கூட துரத்தித் துரத்தி, ‘ஈவ் டீஸிங்’ செய்யும் இளைஞராக பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாத மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ஈர்ப்பதற்காக, ‘தில்லாலங்கடி’ வேலைகள் செய்கிறார்கள். பல் விளக்குவதைப்போல இயல்பாக தண்ணி அடிக்கிறார்கள். கலாட்டா செய்கிறார்கள். தொடர்ச்சியாக, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, நேற்றைய, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று இந்த போதை இளைஞர்கள்தான் இன்று ஹீரோக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால் இப்படி போதை இளைஞனாக, பொறுக்கியாக இருப்பதுதான் ஹீரோவின் அடையாளம் என இளைஞர்கள் மனதில் பதிந்து போகாதா?
எல்லா ஊரிலும் இருப்பதைப் போல இளைஞர்களில் ரவுடிகளும், பொறுக்கிகளும் நம்மூரிலும் இருக்கிறார்கள். ஆனால் அதுவே பெரும்பான்மை குணம் கிடையாது. பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த படங்களே வருகின்றன. கற்பனை வறட்சி, புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக அழுத்தம் காரணமாக மசாலாப் படங்களில் மட்டுமல்ல, கலைப்படங்களிலும் கூட மிகையாக சித்தரிக்கப்படும் பாத்திரங்களும், காட்சிகளும் இடம்பெறுகின்றன" என்கிறார், திரையார்வலரும், கவிஞருமான சரவண கார்த்திகேயன்.

மது அருந்துவது, புகை பிடிப்பது, சைட் அடிப்பது, அடாவடியாகக் காதலிப்பது, துரத்தித் துரத்தி யாரையோ அடிப்பது, உதைப்பது, வெட்டுவது... இப்படியாகத்தான் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் இளைஞன் சித்தரிக்கப்படுகிறான் அல்லது அரசியல்வாதியாக ஆசைப்படுபவன் வாக்காளர் பட்டியலில் தன் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாத படுமுட்டாளாக இருக்கிறான்.

சினிமாவில் சித்தரிக்கப்படும் இதே இளைஞன்தான் சமூகத்திலும் இருக்கிறானா? அநேகமாக அரசியல் கட்சிகள் கைவிட்டுவிட்ட நேரத்தில் ஈழப் பிரச்சினைகாகத் தெருவில் இறங்கித் தமிழக மாணவர்கள் போராடியது நெடுங்காலத்திற்கு முன் அல்ல. ஊழல் குறித்து அன்னா ஹசாரேவின் அழைப்பைத் தொடர்ந்து எழுந்த அலையில் இளைஞர்களின் பங்கு கணிசமானது. பாலியல் வன்முறைகளை எதிர்த்து அவர்கள் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தங்கள் கனவுகளைக் கைவிட்டு வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். உடன் பிறந்த சகோதரிகளது திருமணத்திற்காக கூடுதல் வேலைகள் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்.கடன் வாங்கியாவது படித்து முன்னேற வேண்டும் என்று வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்களில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டு மாணவர்கள்தான் முதலிடம். யதார்த்தம் இப்படி இருக்க... டாஸ்மாக் பாரில் மது போதையில் முடங்கிப் போனவனாக இளைஞர்களைச் சித்தரிப்பது ஏன்? இதற்குப் பின்னுள்ள நுண் அரசியல் என்ன?
இந்தப் போக்குக்கு படைப்பாளிகளை மட்டும் குறை சொல்லாதீர்கள்" என்கிறார் இயக்குநர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள் என்று வித்தியாசமான கதைகளைச் சொல்ல முற்பட்ட இவர் கூட தமிழ் சினிமாவின் இந்த லேட்டஸ்ட் டிரெண்ட்டை நியாயப்படுத்திதான் பேசுகிறார்.
 
சினிமாவை நம்பிய பலரில் ஒரு சிலரே வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கின்றார்கள். அதில் மிகவும் பாவப்பட்டவர்களாய் இருப்பது தயாரிப்பாளர்கள் தான். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் சென்னையில் எங்கு திரும்பினாலும் நடிக, நடிகைகளின் வீடுகளும், இயக்குனர்களின் வீடுகளும் பிரம்மாண்டமாய் இருக்கும். இது மணிரத்னம் வீடு, இது இயக்குனர் சங்கர் வீடு என்றுச் சொல்வார்கள். ஆனால் எந்த தயாரிப்பாளருக்காவது நிரந்தர வீடு என்று ஒன்றினைக் காட்ட முடியுமா? ஒரு சிலரைத் தவிர பெரும்பாலும் இருக்காது. ஏன் இந்த நிலைமை?
 
இயக்குனர்களும், நடிகர்களுமே காரணம் என்று தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் இல்லாதவர்களாய் குடிக்கும், குட்டிக்கும் அதிகப்படியான காசுக்கும் ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் தான் நடு ரோட்டில் நிற்கின்றார்கள். புத்திசாலிகளைக் கண்டுபிடித்து அவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் வெற்றியைக் குவிக்கின்றார்கள். ஒன்றுக்கும் உதவாத வெத்து வேட்டுகளை நம்புவர்கள் நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.
ஒவ்வொருக்கும் ஒரு விதமான விலையை சினிமாவில் சொல்கின்றார்கள். அது பெரும்பாலும் குடி அல்லது குட்டியாய் இருக்கிறது.
 
சினிமாவில் இருக்கும் பலர் பெண் மீது மோகம் கொண்டலையும் பித்தன்களாய் திரிவதையும் சினிமா உலகத்தார் அடிக்கடி கிசுகிசுப்பார்கள். தமிழில் மிகப் பிரபலமான இயக்குனர் ஒருவர் தன் படங்களில் நடிக்கும் நடிகையை அடுத்த படத்தில் நடிக்க வைக்க மாட்டார். ஏனென்றால் அந்த நடிகை அவரின் அடுத்த படத்தில் நடிக்க வர மாட்டார் எத்தனை கோடிகள் கொட்டினாலும். அந்தளவுக்கு செக்ஸில் வன்முறையை பிரயோகப்படுத்துவாராம். இந்த இயக்குனரின் காரியத்தால் ஒரு நல்ல குடும்பம் விவாகரத்து வரை சென்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சினிமா உலகில் நடக்கும் அதிபயங்கரம் மந்திர தந்திரம் சூனியம் வைப்பது எல்லாம் வெகு சாதாரணமாய் நடக்கிறது என்றுச் சொல்கின்றார்கள்.
 
எது எப்படிப் போனாலும் சூதும், வாதும் நிரம்பி ததும்பி வழியும் நரகத்தின் கொட்டிலாய் சினிமா உலகத்தின் மறுபக்கம் தெரிகிறது. ஆனால் அது ஒரு ஆபத்தான மிருகங்கள் அலையும் ஒரு செங்கடலாய் நமக்கு தெரிகிறது. கடலில் பயணம் செய்ய விரும்புவோர் எதிர்ப்படும் ஆபத்துக்களை சந்தித்து மீள வேண்டும் அல்லது மரணிக்க வேண்டும்.
 
 இந்த சினிமா பொறுக்கிகளுக்கு நூற்றாண்டு கொண்டாட்டம் வேறு, அதுவும் அரசு செலவில்! 

அரசு டாஸ்மாக்கை நடத்துகிறது எனும்போது, மது அருந்துவது சட்டப்பூர்வமாக சரி என்கிற மனநிலை நம் இளைஞனுக்கு ஏற்பட்டு விட்டது. சினிமா மட்டும் மாறவில்லை. டாஸ்மாக் கலாச்சாரத்தால் தமிழ் சமூகத்தின், ‘லைஃப் ஸ்டைல்’ மாறியிருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டே தமிழ் சினிமா இயக்குநர்கள் காட்சிகளை அமைக்கிறார்கள். அத்துடன், தான் எடுக்கும் சினிமா, தயாரிப்பாளருக்கு வணிகரீதியான வலுவையும் தரவேண்டும் என்றே ஒவ்வொரு இயக்குநருக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது" என்கிறார் ராம்.

திரைப்படத்தின் உள்ளடக்கத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு தணிக்கைக் குழுவிற்கு உண்டு. ஆனால் சில படங்களைப் பார்க்கும்போது தணிக்கைக் குழு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தீய பழக்கங்களைப் பெருமையாகச் சொல்லும் படங்களுக்கும், ஆபாசமான இரட்டை அர்த்தப் பொருள் பதிந்த வசனங்கள் நிறைந்த படங்களுக்கும் ‘யூ’சான்றிதழ் வழங்கப்படுகிறது, சமீபத்தில் திரைக்கு வந்த, ‘ஆர்யா சூர்யா’ அப்படிப்பட்ட படம்தான்.
 
இது திரைப்படத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல, சமுதாயத்தின் வீழ்ச்சி. வலிமைமிக்க ஊடகமான சினிமாவை இன்றைக்கு எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்? கதாநாயகன் அணியும் கோட், கையில் கட்டியிருக்கும் வாட்ச், முகத்தில் அணிந்திருக்கும் கண்ணாடி மாதிரி கதாநாயகியையும், நாயகனின் விளையாட்டு பொம்மையாக சித்தரிக்கிறார்கள். எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ, அந்த நிலைக்கு இந்த சினிமா ஊடகம் வந்திருக்கிறதே... இந்திய சினிமா குறிப்பாக தமிழ் சினிமா என்கிற வருத்தமும் கோபமும் என்னைப்போல பலருக்கும் உண்டு" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

ஆனால் இந்த அறிவுஜீவிகளின் கோபம் கையாலாகாத மலட்டுக் கோபம். பெரியார், ராஜாஜி, காந்தி போன்றவர்கள் வெளிப்படையாக சினிமாவை தீமை என விமர்சித்துப் பேசியதுண்டு. எம்.ஜி. ஆர். தன் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலோ, மது அருந்துவது போன்ற காட்சிகளிலோ நடித்தது இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளோ, அறிவுஜீவிகளோ ஏன் ஊடகங்களோ கூட இந்தச் சீரழிவைக் கண்டிப்பதில்லை. குறைந்தபட்சம் ஒரு விவாதத்தைக்கூட முன்னெடுப்பதில்லை. இவர்களில் பலர் சினிமாவால் ஆதாயம் பெறுகிறார்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

அதனால் மக்கள், குறிப்பாக படித்த இளைஞர்கள், இந்தப் படங்கள் நம்மை இழிவுபடுத்துகின்றன என்பதைக்கூட உணர்ந்துகொள்ள இயலாதவர்களாக இந்தப் படங்களை விழுந்தடித்துக் கொண்டு போய்ப் பார்க்கிறார்கள்.சோஷியல் நெட்ஒர்க் புரட்சியாளர்கள், ‘நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டைத் தண்ணி வறண்டு போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், ரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை, ‘சூப்பர்’ என்று நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். 

தெரியாமல்தான் கேட்கிறேன். தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு சொரணை என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா?
 
நாம் எங்கோ நாட்டின் எல்லையில் சமுகத்தை சீரழிக்கும்  தீவிர வாதிகளை ராணுவத்தை  விட்டு சுட்டு கொல்லுகிறோம், ஆனால் நம்முடனே உயர்ந்த அந்தஸ்தில்  இருந்து கொண்டு நம் சமுகத்தை கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கும் இந்த சினிமா கயவர்களை யார் சுட்டு கொல்லுவது??
 
அன்புடன்
சாதிக் கட்டமீரான்