Do not mix up truth with falsehood and knowingly hide the truth. Holy Qu’ran(2:42)

Wednesday, February 27, 2013

15. பர்தாவை ஏன் எதிர்க்கவேண்டும்?!



15.   பர்தாவை ஏன் எதிர்க்கவேண்டும்?!

 
 

’’வெட்கம் நல்லதைத்தவிர வேறெதையும் கொண்டுவராது’’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பகன்றார்கள். (ஸஹீஹுல்புஹாரி 6117)

இஸ்லாம் இன்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேகமாகப்பரவி வருகிறது என்பது உண்மையே!.
மேலை நாட்டவர்கள் தங்கள் மேலான மனதை (மன்னிக்கவும்) அதை அப்படியே விட்டுவிட்டு தங்கள் கீழான மனதால் எந்த அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பர்தாவை (ஹிஜாப்) அவர்கள் எதிர்ப்பதின்மூலம் அறியலாம்.

இஸ்லாமிய ஷரீஅத் பெண்களின் உடம்பை மறைக்கச்சொல்வதின்மூலம் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கிறது. இதன் மூலம் பெண்கள் எல்லை மீறும் மனநிலையை அடைவதில்லை. அதனால் சமுதாய (கலாச்சார) சீர்கேட்டுக்கு தாங்கள் காரணமாவதில்லை.

முஸ்லிம்கள், மனதளவில் போராடி இறைக்கட்டளைக்கு எப்படியாவது அடிபணிகிறார்கள். காரணம் இஸ்லாமிய ஷரீஅத். இந்த வாழ்க்கை நெறி முஸ்லிம்களுக்கு ஒரு வேலி போன்றது.

மனிதமனம் கீழான இச்சையை என்றும் நாடும் என்பது ஒரு புதிரல்ல. ஆண்கள் தங்கள் கீழான இச்சையை தீர்க்குமுகமாக பெண்களை நாகரீகம் என்ற போர்வையில் ஆட்படுத்திவிடுகிறார்கள். ஆண்களின் மறைமுக ஆசைகளுக்கிணங்க பெண்கள் தாங்கள் மறைத்துவைத்துள்ள ஆசைகளுக்கு ஒரு வடிகால் கிடைக்கப் பெறுவது மேலைநாடுகளில் மற்றும் மேலைநாட்டு மோகம்கொண்ட நகரங்களில் / சமுதாயங்களில் நாகரீகமாகிவிடுகிறது என்றால் அது மிகையாகாது.

ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் இவைகளுக்கு தடையாக இருக்கிறது. எங்கே பர்தா (நிகாப்) அணிந்த முஸ்லிம் பெண்களைப்பார்த்து மற்ற சமுதாய பெண்பிள்ளைகள் அதன் காரணங்களைக்கேட்டு நன்மை அடைந்துவிடுவார்களோ என்று பயந்து அவர்களைக்காரணம் கேட்க விடாமல் ’’இஸ்லாம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை’’ என்று முந்திக்கொண்டு பத்திரிக்கைகளில் கிறுக்கிவிடுகிறார்கள்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என மீடியாக்களில் பிரச்சாரம் செய்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் இஸ்லாமியப்பெண்களை சுதந்திரம் மறுக்கப்பட்டவர்கள் என்று கூற அவர்கள் தயங்குவதில்லை. சில ஐரோப்பிய நாடுகள் பர்தாக்களை தடை செய்யக்காரணம் உலக மீடியாக்கள் செய்யும் இஸ்லாமிய எதிர்ப்புப்பிரச்சாரமும் ஒரு காரணம் என்பது மறுக்க இயலாத உண்மைதான்.
ஆண்கள் மத்தியில் வேலை செய்யும் பெண்களின் நிலை எப்படியிருக்குமென்றால் அவர்கள் உடலலவில் பெண்களாகவும் மனதளவில் ஆண்களாகவும் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் அந்நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.

மீடியாக்களில் வரும் பெண்கள் எந்த அளவிற்கு உடலைக்காட்டமுடியுமோ அதைச்சந்தோஷமாகச்செய்கிறார்கள். இது ஆண்களின் தூண்டுதல் மட்டும் என நாம் நினைக்கமுடியாது. அந்த பெண்களின் மறைத்துவைக்கப்பட்டிருந்த வக்கிர ஆசையும் ஒரு பிரதான காரணமுமாகும்.

கனடா நாட்டில் வாழும் சுமைய்யா ஹுஸைன் என்ற 18 வயதுப்பெண் சொல்கிறார்:-
ஒரு பெண் தன் உடலை ( அங்கங்கள் வெளியில் தெரியாமல்) மறைத்து இருந்தால் ஆண்கள் அவர்களின் தோற்றத்தை வைத்து அவர்களைக்கணிக்க முடியாது. மாறாக இப்பெண்களை அவர்களின் நடையுடை பாவனை மற்றும் ஒழுக்கத்தை வைத்து மட்டுமே கணிக்கமுடியும்.

நான் இந்த ஆண்களுக்குக்கூறுகிறேன், பர்தா ( ஹிஜாப்) எங்களுக்கு ஒரு கடமையல்ல. மாறாக அது எங்களுக்கு எங்களைப்படைத்தவனால் கொடுக்கப்ப்பட்ட உரிமையாகும். அவனே எங்களை மிகவும் அறிந்தவன். இது எங்களுக்கு பிரயோசனமேயாகும். இதுதான் ஒவ்வொருபெண்ணும் பெறப்போராடவேண்டியதாகும்.

பெண்கள் தங்கள் உடலை மறைப்பது ஆண்களின் கீழான எண்ணங்களையும் அல்லது கேவலமான நடவடிக்கைகளையும் தடுக்கிறது. ஒரு பெண் தன் (உடல் மற்றும் உடை) அழகை வெளிக்காட்டுவதால் அவள் யாரென்று அறியப்படுவதில்லை.
மாறாக இது ஃபேஷன் இண்டஸ்ரியிடமிருந்து என்னை காப்பாற்றுகிறது. பர்தா ( ஹிஜாப்) என்னை மீடியாக்களிடமிருந்து விடுதலையாக்குகிறது. இது என்னை நானாக இருக்க அனுமதியளிக்கிறது.

சிலர் நினைக்கலாம் முஸ்லிம் பெண்கள் உடலை அதிகம் மூடும்போது குறைந்த சுதந்திரம் பெறுகிறார்கள் என்று. ஆனால் அப்படியல்ல. இஸ்லாமிய வழக்கப்படி இது எதிர்மறை. ஒரு முஸ்லிம் பெண் குறைவாக உடலை மூடும்போது அவள் அதிகமாக தாழ்த்தப்படுகிறாள். அதிகமாக மூடும்போது குறைவாக ஆண்களால் விமர்சிக்கப்படுகிறாள்.

சில மேலைநாட்டுப்பெண்கள் சொல்கிறார்கள்: ஆண்களும் பெண்களும் சமம் அதனால் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்று. ஆனால் ஆண்களும் பெண்களும் சமமானவர்களல்ல. சமம் என்ற பெயரில் எப்படி பெண்கள் மேல்அங்கியைத் தவிர்க்கமுடிகிறது? ஆண்களும் பெண்களும் உடல் அமைப்பைப் பொருத்தவரை சமம் அல்ல. ஆனால் உரிமை மற்றும் நீதியில் இருவரும் சமம். சொல்லப்போனால் பெண்களுக்குத்தான் இறைவன் கூடுதல் உரிமை கொடுத்துள்ளான். உடைகளைக் குறைப்பதால் பெண்கள் ஆண்களுக்கு நிகராக முடியாது. இது ஆண்களின் சிந்தனைகளை மாற்றத்தான் வழிவகுக்குமே தவிர வேறில்லை. ஏனென்றால் பெண்களின் உடலமைப்பு அப்படி!

இது எவ்வளவு உண்மை.! ஆண்களின் வக்கிரபுத்திக்கு பெண்களும் துணைபோவதுதான் ஒரு துரதிர்ஷ்டமான நிலை. இது சமுதாய மேம்பாட்டிற்கு உகந்ததல்ல.

ஆக, பெண்கள் பர்தா (ஹிஜாப்) அணிவதை எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள். இதில் யாருக்கு சந்தேகம் இருக்கமுடியும்?
                                                                  -----------------------------------------


பயணம் பயணம் இது மனிதவாழ்க்கையின் தொடக்கம். வாழ்க்கையொரு பயணம் அதில் பாதைகள் மட்டுமே மாறும். வாழ்க்கைப்பயணத்தின் ஊடே எத்தனையோ பயணங்கள் சிறிதோ பெரிதோ ஆனால் முடிவில் சங்கமம். பயணம் இது தொடர்வது மரணம் வரை மட்டுமல்ல அதற்கும் மேலே ஒருவர் தொடர்ந்த பயணத்தின் நோக்கம் அதன் முடிவில் அறியப்படும் இதன் முடிவு - யார் அறிவர்? பாவத்தின் சம்பளம் மரணமல்ல ஏனெனில் மரணம் மற்றுமொரு பயணத்தின் தொடக்கம். அடைபட்ட கூட்டிலுருந்து விடுதலை - ஆம் தடையில்லா மீண்டும் ஒரு புதிய பயணம். உலகில் ஆத்மா தொடங்கிய தேடல் சரியாக இருந்தால் கூடில்லா புதிய பயணத்தில் தேடியதைக்கண்டு கொள்ளும்.
 
கடைசியாக எனக்கு ஒரு கவிதை நினைவிற்க்கு வருகிறது .........................
 
பர்தாக்களின் வலைத்தளங்கள்!

வலைத்தளத்திற்கு வருவதற்குமுன்னால் வாசியுங்கள்

வந்த தூதரின் வாழ்க்கை நெறிகளை.

புகைபடியா பூக்களாக வேண்டுமெனில் புகலிடம் தேடுங்கள்

புகழுக்குரியோன் நமக்களித்த வேதவாக்கியமதில்.

எண்ணுவதெல்லாம் எழுத்தாக முடியாது - மனித மனம்

நினைத்தையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது.

பெண்ணைப்பார்க்கையில் ஆண்மனம் தப்பாக எண்ணாது - நீ

அவனுக்கு தாயாகவோ தமக்கையாகவோயிருந்தால்.

பெண்ணே தன் திறமையைக்காட்டுங்கள் கணவரிடம் - வேண்டாம்

இந்த வேஷம் வீட்டிற்கு வெளியில்.



இப்படிக்கு அன்புடன் சாதிக் கட்டமீரான்