எங்க வீட்டு சிட்டுக்குருவிகளைப் பத்தி
பேசணும்னு நான் நினைச்சு, நினைச்சு
தள்ளிப் போட்ட விசயத்தைப் எழுத உட்காருவதற்கான நேரம் இன்னக்கி காலையிலதான்
அமைஞ்சிருக்கு. நான் பிறக்கும் முன்பே காலகாலமாய் எங்க
வீட்டு கூரைலே கூடு கட்டி வாழ்ந்த குருவிகள் எங்கேபோயின? என்
வீட்டு கொய்யா மரம் எனக்கு மட்டும் விளையாடும் இடமல்ல! என் குருவிகளுக்கும் தான்!
எனக்கு
விபரம் தெரியும் போது, எனக்கு ஒரு
வாயும், குருவிக்கு ஒரு
வாயும், சோறூட்டி வளர்த்த எங்க நனத்தா, காலத்தில் கரைந்து போனது போல் இக்குருவிகளும்
காலத்தில் மறைந்து போயினவோ அல்லது மாயின்ந்து போயினவோ?
முன்பெல்லாம் கிராமத்து வீடுகளெங்கும் காணக்கிடைக்ககூடிய
ஒரு விடயம், அடைக்கலங்குருவிக்கூடு...கூரை வீடு,பனைவாரை அடித்த ஓட்டு வீடு,செங்கல் சுவர் மச்சு வீடு என்று எந்த வீடாக இருந்தாலும்
மேக்கால ரூம், கிழக்கால ரூம் என்று எல்லாவிடங்களிலும்
வாகான இடமாய்ப்பார்த்து கூடுகட்டியிருக்கும்...
அது கூடுகட்டும் அழகே தனி...காய்ந்த புல்,சின்ன வைக்கோல், ஏதோ ஒரு செடியின் காய்ந்த சருகு, கொஞ்சம் இறுக்கமான சின்ன குச்சி என்று எதாவது ஒன்றை அலகில் வைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் குறையும் நேரம் பார்த்து முற்றத்தின் இரும்பு கம்பியிலோ, சுவர் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்பமரத்து மூன்றாவது கிளையிலோ சுறுசுறுப்பாக தலையை ஆட்டி ஆட்டி சின்னக்கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும்...
பாட்டி வெற்றிலைப்பாக்கு இடிக்கும் சத்தமோ, மோர் சிலுப்பும் சத்தமோ, வியர்வையோடு தாத்தா வந்தமரும் சத்தமோ, ஜெனரேட்டர் இஞ்சின் ஓடும் சத்தமோ, ட்ராக்டர் ட்ரெய்லர் மாட்டும் சத்தமோ அதை தொந்தரவு செயததாக நினைவில்லை...தான் உண்டு தன் வேலை உண்டு என்று கருமமே கண்ணாக கூண்டு கட்டுவது, தான் என்ன வேலை செய்கிறோம் என்று இந்த மனிதனுக்கு தெரியுமோ தெரியாதோ என்பது பற்றி கவலை இன்றி கூட்டின் வாசலிலோ, உள்ளோ அமர்ந்திருப்பது...
முட்டை போட்டு குஞ்சு வைத்து, அந்த குஞ்சுகளுக்கு எங்கிருந்தோ பிடித்துவந்த புழுவோ, பூச்சியோ, கீச்ச் கீச்ச் சப்தங்களுக்கு மத்தியில் ஊட்டி, வெளியே கோழிகளுக்கு போட்டிருக்கும் கம்போ கேவுறோ தனக்கொன்று பொறுக்கிக்கொண்டு உத்திரத்தில் சத்தமிட்டுக்கொண்டோ, சில நேரங்களில் சத்தமில்லாமலோ உட்கார்ந்திருக்கும்...

இத்தனை வருஷமா இதே இடத்தில் பார்க்கிறேனே, இதுக எத்தனை
தலைமுறையா இருக்கும்? அப்படி தலைமுறை தலைமுறையா வந்தா, இதுக எத்தனை
வருஷம் வாழுது? எத்தனை முறை வருஷத்தில முட்டையிட்டு குஞ்சு
பொரிக்கிது? எப்படி பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே
அதுகளோட குஞ்சுகள் மிகச் சரியா அதே கூரையை கண்டுபிடிச்சு வந்து குடும்பம் நடத்துது? அப்படி
இப்படின்னு பெரும்பாலும் நான் மொக்கையா இருக்கும் பொழுது இது போன்ற கேள்விகள்
மண்டைக்குள்ளர குடைஞ்சதுனாலே இங்க பதிவா கொண்டு வர அளவிற்கு ஆயிப்போச்சு.
சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் நீக்க மற மனித குடியேற்றம் எங்கெல்லாம் அரங்கேறியதோ அங்கெல்லாம் நோக்கத்தோடோ அல்லது திட்டமிடாமலோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் வாழும் இடத்தில் இது போன்று நகரங்களையொட்டி தட்பவெப்பம் கொஞ்சம் இதமாக இருக்கும் பொழுது மனித வாழ்விடங்களை சார்ந்து வாழ்வதாக அமைத்துக் கொண்டும், குளிர்காலத்தில் கிராமங்களை ஒத்த இடங்களுக்கும் குடி பெயர்ந்து விடுவதாக தெரிகிறது.

இந்த
சிட்டுக்குருவிகள் இனம் வந்து பனை மரத்தில கூடு கட்டி வாழுமில்ல முடைவான் குருவி (the weaver bird) அத்தோட
இனம்தானாம்.
இந்த புகைப்படத்தில நீங்க பார்க்கிறது ஒரு ஆண் குருவி. ஆண்/பெண் என அடையாளப் படுத்தி பார்க்கிறது ரொம்பச் சுலபம். ஆண் குருவி நல்லா வண்ணமயமா இருக்கும், செங்கல் நிறம் மற்றும் கருமை நிறக் கோடுகள் அதன் இறக்கையின் மீதும், அலகிற்கு பக்கத்தில் கருமையான ஒரு திட்டும், அலகிற்கு மேலே முன் மண்டையின் மீது சாம்பல் நிறமாகவும் இருக்கும். பெண் குருவிகள் நிறம் குறைச்சலாவும், சாம்பல் நிறத்திலும் இருந்து போகும். இதோட ஆரோக்கியம் அதன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் அந்த கருமையான திட்டைக் கொண்டும் அறியலாமாம். நல்லா அடர்த்தியா இருந்தா, ஆரோக்கியமாக இருப்பதாகவும், இனவிருத்தி செஞ்சிட்டும் இருக்காருன்னும் தெரிஞ்சிக்கோங்க.
அதோட அலகு இந்த நாட்டில குளிர்காலத்தில கருமை நிறமாகவும், மிதமான வெப்ப காலங்கள்ல மஞ்சளாவோ அல்லது பிரவுன் நிறத்திலோ இருக்கும்.

வருஷத்திற்கு
ரெண்டு, மூணு முறை
முட்டையிடும் போல, ஒவ்வொரு
முறையும் 2-5 முட்டை
வரைக்கும் இட்டு 14-16 நாட்கள்
அடைகாக்குதாம். இது பொதுவா ஏப்ரல்-ஆகஸ்ட் மாதம் வரைக்கும் நடை பெறுவதாக தெரிகிறது.
கட்டற்ற சுதந்திரத்தோட சுத்தித் திரியற சிட்டுக்குருவிகள் குறைந்தது ஐந்து
வருடங்கள் வாழ்வதாகவும், கூண்டில அடைச்சு
வாழ வைச்சிப் பார்த்ததில பத்து வருஷம் வரைக்கும் கூட நீட்டிச்சதா சொல்லிக்கிறாங்க.
ஆனா, என்னயப் பொருத்த
மட்டில அதில உடன்பாடு இல்ல, எத்தனை வருஷம்
மூச்சு விட்டுக்கிட்டு திரிஞ்சோங்கிறது முக்கியமில்ல; எத்தனை மணி
நேரம் வாழ்ந்தோங்கிறதிலதான் விசயம் இருக்கின்னு நினைக்கிற ஆளு நான். அதுனாலே அதோட
வன வாழ்க்கை ஐந்து வருஷமே இனிப்பா இருக்கும் அதுகளுக்கும்;எனக்குமின்னு தெரியுது.
இன்றைக்கு அடைக்கலங்குருவிகள் இல்லை...
ஆமாம்...அழிக்கப்பட்டுவிட்டன...தானாக அல்ல...அழித்தொழிக்கப்பட்டுவிட்டன...
ஆச்சர்யமாக இருக்கிறதா என்ன ? ஆமாம். அதுதான் உண்மை.

செல்போன் டவர்
மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை
அதிகம் பாதிப்பது உண்மை சிட்டுக்குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//
இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம் அவைகளை சென்றடைய வைப்பதற்கான நுண்ணலை டவர்கள்; அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...
சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்ச்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?
எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது.

யானைகளில்
(அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன்
செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க
முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.
அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.
பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் கடைசியாக அடைக்கலங்குருவியை எப்போது பார்த்தீர்கள் ? கிராமமோ, நகரமோ...மனிதர்களை தன்னுடைய தோழர்களாக நினைத்து, அவர்களிடம் அடைக்கலம் தேடிவந்தவை இந்த அடைக்கலங்குருவிகள்..
மனிதன் கட்டும் வீட்டில் நாமும் நமது வீட்டை கட்டிக்கொள்வோம்...அவனால் நமக்கு தீங்கில்லை..நன்மையே..என்று அதன் சின்ன உள்ளத்தால் சிந்தித்து மனிதனிடம் அடைக்கலம் தேடிவந்ததனாலேயே இதன் பெயரை அடைக்கலம் குருவிகள் என்று அழைத்தோம்...
இன்றைக்கு அதே மனிதன் அடைக்கலங்குருவிகளை, வேரோடு, வேரடி மண்ணோடு அழித்தொழிக்கும் பணியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிட்டான்...எப்படி என்று கேட்கிறீர்களா ?
புதிர் வைக்கும் எண்ணம் இல்லை எனக்கு....நான் நெஞ்சார ரசித்து பார்த்த அடைக்கலம் குருவிகளை இனிமேல் பார்ப்பேனா என்ற கேள்வி கத்தி போல் இதயத்தை ஊடுருவித்தாக்குகிறது...
ஆம்...அடைக்கலம் குருவிகள் ஆண்மையிழந்துவிட்டன...இனி உங்கள் வீட்டில் அடைக்கலம் குருவி கூடுகட்ட வாய்ப்பில்லை...முட்டையிடவோ குஞ்சு பொரிக்கவோ வாய்ப்பில்லை...
இயற்கை உரங்களை விடுத்து அதிக மகசூலுக்காக செயற்கை உரங்களை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தது சரிதான்...ஆனால் இப்போது உரங்கள் இட்டும் அதன் மேலே அமர்ந்து பயிர்களை நாசம் செய்யக்கூடியதாக பூச்சிகள் திடம் பெற்றுவிட்டன...இதனால் தமிழக விவசாயிகள் அதிக வீரியம் உள்ள உரங்களை கடந்த அய்ந்தாண்டுகளாக பயன்படுத்த தொடங்கி, அதன் மூலம் புல், பூண்டு, வைக்கோல் என்று எல்லா தாவரங்களிலும் அதன் பாதிப்பு...இதன் மூலம் பொதுவாக கிராமங்களில் இருக்கும் அடைக்கலம் குருவிகள் இனவிருத்தி செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...
ஆக இனவிருத்தி செய்யமுடியாமல் போன அடைக்கலங்குருவிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து, நகரமயமாக்கலில் அதன் சிறிய உணவு தானிய இருப்பும் விஷமாகிப்போன நிலையில் ஒவ்வொன்றாக அழிந்துவிட்டன. இனி அடைக்கலங்குருவிகளின் பொம்மைகளைத்தான் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கமுடியும் போலும்..
வீட்டில் மரம் வைக்கும் பழக்கம் இப்போது முற்றிலும் நம்மிடம் மறைந்து விட்டது. இப்போதெல்லாம் பள்ளபட்டியில் வீட்டில் மருந்துக்கு கூட ஒரு மரம் வைப்பது இல்லை! மரம் வைக்கும் இடம் கூட வேஸ்ட்னு, மாடிவீடு கட்டி வாடைகைக்கு விடறோம்.
தெற்கு மந்தை டேன்ங்கோரம் இந்த கட்டுரையை எழுதும்போது கீச் கீச் என்று எங்கோ ஒரு ஓசை...அது அடைக்கலம் குருவியாக கண்டிப்பாக இருக்கக்கூடும்...இனிவரும் சந்ததிகள் இந்த ஓசையை கேட்கமுடியாமலே கூட போய்விடக்கூடும்...!!! மனது கனமாகிறது...!!!!!!

No comments:
Post a Comment
Please Write Your Comments Here! If u have ID then enter ur ID or select anonymous in the combo box